மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு
“தண்ணார் தமிழளிக்கும் தண் பாண்டிநாடு என” பார்மன்னு தொன்மைப் புகழ் என்று மணிவாசகராலும், பூண்டது பாண்டிநாடு” சேக்கிழாராலும் பாராட்டப்பெற்ற பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை என்னும் பழம்பதி. அங்கு கருணையே வடிவாகிய பார்வதி தேவியார் மதுரைப் பாண்டிய மன்னனுக்கு மகளாக மீனாக்ஷி என்ற திருப்பெயருடன் அவதரித்து சோமசுந்தரப் பெருமானை நாயகனாகப்பெற்று, முருகப்பிரானே உக்கிர பாண்டியனாகத் தோன்றிய பெருமை வாய்ந்தது. இறைவன் அற்புதமான 64 திருவிளையாடல்கள் செய்தருளிய அரும்பதி. ராஜசேகர பாண்டியன் வேண்டுதலுக்கிணங்கி கால்மாறியாடி ஐந்து நடன சபைகளுள் நடுநாயகமாய் வெள்ளியம்பலமாக விளங்குகிறது. பதஞ்சலிக்காக தில்லை நடனக்காட்சியை மதுரையில் காட்டினார் கூத்தப்பெரு. மான். சங்கத் தமிழ்வளர்த்த திருப்பதி.
“வேதநெறி தழைத் தோங்க மிகு சைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலிய” திருஞானசம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று, நின்ற சீர்நெடுமாறன் வெப்பு நோயைத் தீர்த்து, தேவாரப் பதிக ஏடுகளை நெருப்பிலும் நீரிலும் இட்டு மெய்ப்பித்துச் சைவ சமயமும் திருநீற்றின் ஒளியும் விளங்கச் செய்த பெருமையுடையது, “மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் ” எனச் சேக்கிழாரால் புகழப்பெற்ற பாண்டிமா தேவி மங்கையர்க்கரசியாரும், அவருக்கு உற்ற துணையா யிருந்து சைவம்காத்த அமைச்சர் குலச்சிறைநாயனாரும், திரு நீறு, கண்மணி, சடை முடி தரித்து மும்மையாலுலகாண்ட மூர்த்திநாயனார் முதலிய பல பெரியோர்களும் வாழ்ந்த திருத்தலம். உலகில் பாரதமே புண்ணிய தேசம். அது பல புண்ணிய தலங்களைக்கொண்டது. அவற்றுள் நான்கு. தலங்கள் சிறந்தவை – காசி, காளத்தி, சிதம்பரம், மதுரை, மதுரையில் வசிப்பதாலேயே முக்தி என்ற புகழ்பெற்றது.
திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக் காளத்தி, சிதம்பரம், காசி, கைலரசம், ஆதாரஸ்தானங் களாக கருதப்படுகின்றன. ஆதாரங்களுக்கப்பால் துவாத சாந்தஸ்தானமாக உள்ளது மதுரை. மூலவர் சுயம்பு லிங்கம். சொக்கலிங்கப் பெருமான். வடஇந்தியாவிலுள்ள மதுரை யில் கிருஷ்ணன் லீலைகள் நடைபெற்றன. இங்கே சொக்கர் 64 திருவிளையாடல்கள் புரிந்தார். அவற்றுள் தனிச் சிறப் புடையது, ஈசன் வந்தி என்னும் கிழவிக்காகப் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பால் அடிபட்டு அந்த அடி பிரபஞ் சத்திலுள்ள அரசன் முதலாக எல்லா ஜீவராசிகளுக்கும் விழுந்ததால் மணிவாசகப் பெருமான் பெருமையை உலகுக்குக் காட்டி வைகை வெள்ளத்தைத் தடுத்த திரு விளையாடல். இதனால் இந்த லிங்கத்தைத் தரிசித்தோர் பிரபஞ்சத்திலுள்ள பலனைப் பெறுவர்.
எல்லா லிங்கங்களையும் தரிசித்த இந்திரன் தன் பிரம்மஹத்திதோஷம் இந்த லிங்கத்தைப் பூசித்ததால் நீங்கப்பெற்று ஆலயமும் கட்டி இந்திர விமானம் அமைத்து ஆண்டுக்கொருமுறை, சித்திரா பவுர்ணமியன்று பூசை செய்வதாகப் புராண வரலாறு கூறுகிறது. அதுபற்றி இங்கு சித்ராபவுர்ணமி உத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கோயிலை நடுநாயக மாக வைத்துச் சுற்றிலும் வீதிகள் அமைக்கப் பெற்றிருப் பத்து இந் நகருக்குத் தனிச் சிறப்பு. ஆடிவீதி, சித்திரைவீதி, ஆவணி மூலவீதி, மாசிவீதி, வெளிவீதி என்று ஒழுங்காக அமைந்திருக்கின்றன. சித்திரை விழா மாசி வீதியிலும், மாசி விழா சித்திரை வீதியிலும் நடைபெறுவதும் ஓர் திருவிளையாடல்போலும்.
இத்தலத்தில் ஸ்ரீ மீனாட்சியம்மையை முதலில் வழிபட் டுப் பின்னர் சொக்கலிங்கப் பெருமானை வழிபடுவதே முறை யாக உள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் அம்மையப்பராக மக்களுக்கு அருள் புரிகின்றனர். இந்நூல், வரலாற்றுச் செல்வர்- திரு.R. பஞ்சநதம் பிள்ளை யவர்களால் எழுதப் பெற்று ஆலய தர்மகர்த்தர்களால் வெளியிடப் படுகிறது. இவ்வாசிரியர் பல தல வரலாறுகள் எழுதி அனுபவமுள்ள தமிழறிஞர். கல்வி, அறிவு, ஒழுக்கங்களிற் சிறந்த புலவர். சமய அறிவும், தெய்வ பக்தியும் நிறைந்த பெரியார். இந்த வரலாறு எளிய இனிய நடையில் எழுதப்பெற்றுப் பல பயனுள்ள பகுதிகளைக் கொண்டுள்ளது. இந் நூலாசிரி யருக்கும், ஆலய தர்மகர்த்தர்களுக்கும் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
“மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே “
என்றார் தாயுமானவர்.
மதுரையே மீனாக்ஷி, மீனாக்ஷியே மதுரை. கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி’ என்பது இம் மூன்று தலங்களிலும் அம்பிகையின் தனிச் சிறப்பைக் காட்டும் முதுமொழி. இத்தலத்தின் வரலாற்றை மக்கள் அனைவரும் படித்து உணர்ந்து பிறவிப் பயனைப் பெறுவார்
களாக.
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று ”-ஔவையார்
“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் ”-திருவள்ளுவர்.
“கண்ணினாற் பெரும் பயன் அண்ணலார்
நல்விழாப் பொலிவு கண்டார்தல் ”
என்றார் சேக்கிழார் பெருமான். மதுரைமீனாக்ஷி சுந்தரேசுவரர் ஆலயத்தில் திருவிழாக்கள் எல்லாம் கண் கொள்ளாக் காட்சிகள். இவ்விழாக்களின் தத்துவங்களை விளக்கிப் பிரசுரங்களாக விரைவில் வெளியிட ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
” சூழுமிதழ்ப் பங்கயமாக அத்தோட்டின் மேலோள்
தாழ்வின்றி என்றுந் தனிவாழ் வதத்தையல் ஓப்பார்
யாழின் மொழியின் குழலின்னிசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பதாகும் ” – பெரியபுராணம்.
“ புண்ணியம்புரி பூமி பாரதில் வருபோகம்
நண்ணியின் புறுபூமி வானாடென்ப நாளும்
புண்ணியம்புரி பூமியுமதில் வருபோகம்
நண்ணியின்புறு பூமியுமதுரை மாநகரம் -திருவிளையாடற் புராணம்.
குன்றி விளவாடை வரும்பொழு தெல்லாம்
மலர்ந்த திருக்கொன்றை நாறத்
தென்றல் வரும்பொழு தெல்லாம் செழுஞ்சாந்தின்
மணநாறுஞ் செல்வவீதி
நன்றறிவார் வீற்றிருக்கும் நான்மாடக்
கூடல் வளநகரி யாளும்
வென்றி புனைவடி சுடர்வேன் மீனவனை
வானவர்கோன் மதலை கண்டான் ”வில்லிபாரதம்.
நீல மாமிடற் றால வாயிலான்
பால தாயினார் ஞாலம் ஆள்வரே ”-சம்பந்தர் தேவாரம்.
“ஆலந்தரித்த லிங்கம்,ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்தலிங்கம் – பாலொளியாம்
அத்தளே கூடல் மதுரா புரிஉமையாள்
அத்தனே ஆல வாயா “- சொக்கநாத வெண்பா.
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானு முடனே காண்க திருவாசகம்.
சென்னை அறநிலையப் பாதுகாப்புத்துறை ஆணையாளர்
உயர்திரு. A. உத்தண்டராம பிள்ளை, B.A., B.L, I.A.S.
மாமதுரை
அங்கயற்கண் நாயகியே ! அம்மையே. – துங்க
ஒளியே! பெருந்திருவே ! ஒதிமமே ! உண்மை
வெளியே ! பரப்பிரம வித்தே ! அளிசேரும்
கொந்தளக பந்திக் குயிலே! சிவயோகத்
தைத்தருவே ! மூவருக்கும் அன்னையே !- எந்தமிடர்
அல்லல் வினையெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்ல சவுபாக்கியத்தை நல்கியே -வல்லபத்தி
ஆசுமது ரஞ்சித்ர வித்தாரம் என்றறிஞர்
பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு-நேசமுடன்
தந்தென்னை ஆட்கொண்டு சற்குருவாய் என்னகத்தில்
வந்திருந்து புத்திமதி கொடுத்துச்-சந்ததமும்
நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண்.
– மீனாக்ஷியம்மை கலிவெண்பா
அ. உத்தண்டராமன்
உள்ளடக்கம்
1.பாண்டிநாடும் நகரமும்
2. நகரமும் கோயிலும்
3. தலத்தின் வேறுபெயர்கள்
4.மதுரை நகரம்
5. பார்க்கவேண்டிய பிற இடங்கள்
6. கோயிலின் அமைப்பு
7. வெளி மண்டபங்கள்
8. சுற்றுக் கோயில்கள்
9.கோயில்களும் குறிகளும்
10.மூர்த்திகளின் பெயர்கள்
11. தீர்த்தங்கள்
12. தலப்பெருமைகள்
13. திருப்பணிகள்
14. சிற்பங்கள்
15. தினப்பூஜைகள்
16. திருவிழாக்கள்
17. வருமானமும் சொத்துக்களும்
18. நிர்வாகம்
19. சரித்திர வரலாறு
20. கல்வெட்டுக்கள்
21. புராண வரலாறுகள்
22. தேவாரத் திருப்பதிகங்கள்
23. புராணப் பாடல்கள்
24. பிற இலக்கியங்கள்
25. பிற விவரங்கள்
கோயில் விளக்கம்
கோயில் – திருஆலவாய் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர்
கோயில் (அங்கயற்கண்ணிச் சொக்கர் கோயில்).
இடம் – மதுரை.
விநாயகர் – சித்தி விநாயகர்.
முருகன் – கூடல்குமரர்.
அம்மன் – ஸ்ரீ மீனாட்சி (அங்கயற்கண்ணி).
மூலவர் – ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்).
விமானம் – இந்திர விமானம்.
மரம் – கடம்ப மரம்.
தீர்த்தம் – பொற்றாமரை – வைகை – எழுகடல்.
முக்கிய விழாக்கள் – சித்திரைவிழா ஆவணி மூலவிழா தை தெப்பவிழா.
பாண்டிநாட்டில் மதுரை ஜில்லா மதுரை ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே அரைமைல் தூரத்தில் கோயில் உள்ளது. பெருமான் 64 திருவிளையாடல்களை நடித்துக் காட்டிய இடம். திருஞானசம்பந்தராலும், திருநாவுக் கரசராலும் தேவாரம் பாடப்பெற்றது. பல புராண இலக் கியங்களையுடையது. பல மண்டபங்களையும், சிற்பங்களையுங் கொண்டது.
ஸ்ரீ மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயில்களின் படங்கள் (Plan) ஆங்கில விளக்கங்களுடன் ஒரே படமாகத் தனியே சேர்க்கப்பெற்றுள்ளது.
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வரலாறு
(திருவால்வாய்) தேவாரப் பாடல் பெற்றது.
எழுதியவர்:
வரலாற்றுச் செல்வர் – புலவர்மாமணி – ஆராய்ச்சிமணி
திரு. R.பஞ்சநதம் பிள்ளை அவர்கள்
தமிழாசிரியர், திருச்சிராப்பள்ளி
ஆலய வெளியீடு
1959
விலை ரூ.2-00
Leave a Reply