பிறப்பு முதல் இறப்பு வரை!
அரசு ஆவணங்கள்/ சேவைகள் – வழிகாட்டி கையேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மாணவர் அணியின் சார்பாக கடந்த பல ஆண்டு காலமாக தமிழ்நாடு முழுவதும் பல நூறு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தொடந்து நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தங்களுடைய பள்ளி படிப்பிற்கு பிறகு என்னென்ன மாதிரியான படிப்புகள் இருக்கின்றன என்ற தகவல்களை நம் ஜமாஅத்தின் கல்வியாளர்கள் வாயிலாக நாம் கொடுத்து வருகிறோம். இறைவனின் அருளால் “எங்கு படிக்கலாம்/ என்ன படிக்கலாம்!” என்ற ஒரு புத்தகத்தை ஏற்கனவே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
தற்போது உங்கள் கையில் தவழும் இந்த கையேடு அரசின் இணைய வழிச்சேவை மூலம் ஜாதி, இருப்பிட, வருமானம் போன்ற அனைத்து அரசு துறை சார்ந்த சான்றிதழ்களை பொதுமக்கள் எவ்வாறு இலகுவாக அவர்களே விண்ணப்பித்து பெறலாம் என்பதை எளிமையாக விளக்கும் விபரங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
பொதுமக்கள் தாங்களுக்கு தேவையான அரசு துறை சார்ந்த சான்றிதழ்களை இணையவழியாக பெறக்கூடிய வழிமுறைகளையும் தெளிவாக அறிந்து விண்ணப்பித்து பெற்று பயன்பெற வேண்டும் என்ற தூய எண்ணத்தில் நாம் இந்த கையேட்டை வெளியிடுகின்றோம். நீங்கள் இதைப்படிப்பது மாத்திரம் இல்லாமல், அனைத்து மக்களுக்கும் இப்புத்தகத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுடைய மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. தவறுகளை சுட்டிக்காட்டினால் அல்லது புதிதாக சேர்க்க வேண்டிய விபரங்களை தெரிவித்தால் . இன்ஷா அல்லாஹ் அதை இந்த கையேட்டின் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் பேரருள் வேண்டும் என்று பிரார்த்தித்து.. இந்த கையேட்டை அல்லாஹ்வின் திருப்திக்காக அனைத்து சமுதாய மக்களுக்காகவும் சமர்ப்பிக்கின்றோம்.
என்றென்றும் கல்விப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில மாணவரணி.
எங்களுடைய facebook பக்கத்தை Like ►Subscribe மற்றும் செய்யுங்கள் தொடர்ச்சியாக வரக்கூடிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய மேலான ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிறப்பு முதல் இறப்பு வரை !! அரசு ஆவணங்கள் / சேவைகள்
வழிகாட்டி – கையேடு
1.ஆன்லைனில் வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி?
2. ஆன்லைனில் சாதி சான்றிதழ் பெறுவது எப்படி?
3.ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
4.பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்புசான்றிதழ் பெறுவது எப்படி?
5.இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி?
6. இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்வது எப்படி?
7. ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?
8.ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை எப்படி இணைப்பது?
Leave a Reply