பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

ஏங்கும் ஏழை


கையிலே வாங்கினேன் பையிலே போடலே

காசு போன இடம் தெரியல்லே-என்

காதலி பாப்பா காரணம் கேப்பா

ஏது சொல்லுவதென்றும் புரியல்லே

ஏழைக்குக் காலம் சரியில்லே


மாசம் முப்பது நாளும் ஒளைச்சு

வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு

காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்

கணக்கு நோட்டோட நிக்குறான்-வந்து

எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே)


சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா

பட்டினியால் பாடுபட்டா

கட்டுக் கட்டா நோட்டுச் சேருது

கெட்டிக்காரன் பொட்டியிலே-அது

குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே)


விதவிதமாய்த் துணிகள் இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதைஎதையோ வாங்கணுமின்னு

எண்ணமிருக்கு வழியில்லே-இதை

எண்ணாமலிருக்கவும் முடியல்லே (கையிலே)


கண்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்

பொண்ணுக்கு துணையா ஆணைப் படைச்சான்

ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலே பலரையும் படைச்சு-அண்ணே

என்னைப் போலே பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே)

 

சிறுவர் சீர்திருத்தம்

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா(சின்னப்)

நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா

எண்ணிப் பாரடா-நீ

எண்ணிப் பாரடா சின்னப்

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா(சின்னப்)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)

ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ

தரும் மகிழ்ச்சி (ஆசை)


நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி-உன்

நரம்போடுதான் பின்னி வளரணும்

தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்


மனிதனாக வாழ்ந்திட வேணும்

மனதில் வையடா தம்பி

மனதில் வையடா (மனிதனாக)

வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ

வலது கையடாநீ

வலது கையடா (வளர்ந்து)


தனியுடமைக் கொடுமைகள் தீரத்

தொண்டு செய்யடாநீ

தொண்டு செய்யடா! (தனி)

தானா எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா எல்லாம்

பழைய பொய்யடா

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போதும்போது

சொல்லி வைப்பாங்க-உன்

வீரத்தைக் கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட

நம்பி விடாதே-நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே-நீ

வெம்பி விடாதே!’ சின்னப்

 

அடக்கம் வீரமும்!


பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈனா ஈயன்னா


சிறுவர்கள்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா

ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா


பெண்: ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்

பேரென்ன?…சொல்லு!


சிறுவர்கள்; வள்ளுவன்!


பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும்

பொருளென்ன?…


சிறுவர்கள்; அன்பு!


பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன?…சொல்லு!


சிறுவர்கள்: காந்தித் தாத்தா!


பெண்: ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன் இறைவனாகும்


சிறுவர்கள்; ஆனா ஆவன்னா


பெண்: அன்பாய்ப் பழகும்

கொம்பை அசைக்கும்

அம்மான்னு கத்தும் அது என்ன?…


சிறுவர்கள்; மாடு!


பெண்: சொன்னதைச் சொல்லும்

கனிகளைத் தின்னும்

சோலையிலே வாழும் அது என்ன?…

சிறுவர்கள்: கிளி!…


பெண்: கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்

பறக்கும் பறவை அது என்ன?…


சிறுவன்: காக்கா!…


சிறுமி: இல்லை,குயில்!…


சிறுவர்கள்; ஆனா ஆவன்னா…


பெண்: அன்பும் அறமும்

அடக்கமும் பொறுமையும்

பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்)


பெண்: ஆளும் திறமையும்

வீரமும் கடமையும்

பெருமையும் கொண்டவர் ஆண்கள்!

(ஆனா ஆவன்னா)

 

நாட்டைக் கெடுத்தவர்


தூங்காதே தம்பி

தூங்காதே-நீயும்

சோம்பேறி என்ற பெயர்

வாங்காதே! (தூங்)


நீ-தாங்கிய உடையும்

ஆயுதமும்-பல

சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும்,

சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)


நல்ல பொழுதையெல்லாம்

தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன்

தானுங்கெட்டார்; சிலர்

அல்லும் பகலும்

தெருக்கல்லா யிருந்துவிட்டு

அதிர்ஷ்டமில்லையென்று

அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக்கொண்டார்-உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம்

கோட்டைவிட்டார்! (தூங்)


போர்ப் படைதனில் தூங்கியவன்

வெற்றியிழத்தான் உயர்

பள்ளியில் தூங்கியவன்

கல்வியழந்தான்!

கடைதனில் தூங்கியவன்

முதல் இழந்தான் கொண்ட

கடமையில் தூங்கியவன்

புகழ் இழந்தான் இன்னும்

பொறுப்புள்ள மனிதரின்

தூக்கத்தினால்-பல

பொன்னான வேலையெல்லாம்

தூங்குதப்பா! (தூங்)

சிறுவரிடம் திறமை


திருடாதே! பாப்பாதிருடாதே!


வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு

சிறிசா இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது

திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)


திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது-அதைச்

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது

திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது (திரு)


கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி

எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

ஒதுக்கிற வேலையும் இருக்காது

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்

கீழும் மேலும் புரளாது! (திரு)

பொருளடக்கம்


1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

1.2 வாய்ச்சொல் வீரர்

1.3 சூதாட்டம்

1.4 போரைத் தடுப்போம்

1.5 மனைவியே மந்திரி!.

1.6 படிப்பும் உழைப்பும்!

1.7 ஏழைகளின் வேர்வை

1.8 பகை நீங்கும்

1.9 கரையேறும் பாதை

1.10 நாடு கெட்டுப் போகுது.

1.11 ஒன்றுபட்ட வாழ்வு


2. நாட்டு நலம்

2.1 வீரன்

2.2 போருக்கு.

2.3 பொது வாழ்வு!

2.4 செயல் வீரர்!

2.5 நாங்கள் பிறந்த நாடு

2.6 நீதி தவிக்குது

2.7 கண் தூங்குமோ?

2.8 வள்ளல் வழி

2.9 வீரச் செயல்

2.10 குழி பறிக்குது வேரிலே!

2.11 உழைத்து முன்னேறு

2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்

2.13 வம்பு வளர்க்கும் கும்பல்

2.14கலைந்து விடும் சாலம்

3.இயற்கை

3.1 போட்டி வேண்டாம்.

3.2 இருள் விலகும் விளக்கு

3.3 தட்டி எழுப்பிடும் சேவலே

3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை

3.5 ஆணவக் குரங்கு!

3.6 நல்லதைக் கெடுப்பவர்

3.7 ஓடும் நீரின் சங்கீதம்

3.8 இதயத்தை திருடியவள்

3.9 அனல் வீசும் நிலவு

4.தெய்வம் தேடுதல்

4.1 சேவை…

4.2 காதல் மாத்திரை

4.3 விடுதலை

4.4 கணவனுக்குச் சேவை,

4.5 உயிர்

4.6 எங்கும் இன்பம்

4.7 கடவுள் எங்கே

4.8 ஆளை விழுங்கும் காலம்

4.9 நீயே துணை!

4.10 மாசற்ற அன்பு

 4.11 பெண் மனசு

4.12 ஞானம்!

4.13 நோட்டம்!

4.14 ஒரே ரத்தம்

4.15 ஏங்கும் ஏழை.

5.சிறுவர் சீர்திருத்தம்

5.1 வீணர்களின் சொல்

5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!

5.3 காலம் மாறும்

5.4அடக்கம் வீரமும்!

5.5 நாட்டைக் கெடுத்தவர்

5.6 கொஞ்சும் குரல்!

5.7 இதய ஒளி!

5.8 உயர்ந்த நினைவு

5.9 பெண்ணரசு!

5.10. உன்னை நம்பு!

5.11 நல்லவனாக

5.12 சிறுவரிடம் திறமை

5.13 துன்பம் வெல்லும் கல்வி!

6. காதல் சுவை

6.1 காதலின் இலக்கணம்.

6.2 காதல் பலன்

6.3 கடல் கடப்பேன்

6.4 ஆசைக்குப் பேதமில்லை

6.5 நாணம் எதற்கு

6.6 ஆசை வளருது

6.7 விருந்துக்கு அழைக்குது

6.8 சக்திக்குமேல் ஆசை

6.9 வண்டைத்தேடும் மலர்

6.10 இன்பம் காணலாம்

6.11 மூடிவைத்த காதல்!

6.12 தடைபோடும் நாணம்

6.13பெண் தெய்வம்

6.14பேசும் விழிகன்

6.15 சிலைக்குள் தெய்வம்

6.16 விருந்து!

6.17 கண்ணும் கண்ணும் பேசுது

6.18 பார்த்து ரசிப்பேன்!

6.19 கலையான நிலை

6.20 மாறும் மனம்

6.21 பூமாலை போட்டவன்

6.22 தாலி கட்டும் வீரன்

6.23 சேவை

6.24 பகைக்குரல் மாறுதே!

6.25 நல்ல துணைவன்

6.26 பெண் முகம் கண்ணாடி

6.27 எண்ணக் கனவுகள்!

6.28 பருவம்

6.29 கதை சொல்லும் தீபாவளி!

6.30 பொல்லாத காதல்

6.31 பெண்ணென்ற கோயில்

6.32 மாறாத ஆசை

6.33 காதல் நிலை

6.34 கண் மலர்

6.35 நடக்கும் மின்னல்!

6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு

6.37 காதல் தோல்வி

6.38 அன்பு விதை

6.39 இல்லறம்

6.40 புது அழகு

6.41 காதலை ஏற்கும் நிலவு!

6.42 தடையில்லை!

6.43 இல்லற ஓடம்

 6.44 கதை கட்டுவார்

6.45 இன்ப வேகம்

6.46 பெரும் சுகம்

6.47 ஆசை மனம்!

6.48 இன்பம் தேடுது

6.49 பேசும் சிட்டு

6.50 கண்ணால் அடக்குவேன்

6.51 மயிலோ குயிலோ!

6.52 வெளிவேசம்!

6.53 கேள்வியும் பதிலும்

6.54 வளைகாப்பு

6.55 மங்கையின் மகிமை

6.56 இன்ப கீதம்

6.57 ஒரு விழிப் பார்வை

6.58 முற்றிய காதல்

6.59 அன்பு ஆசை,

6.60 பெண் உறவு!

6.61 மணமகள்

6.62 பொறுப்புள்ள பெண்

6.63 நன்றி கூறும் தென்றல்

6.64 பிரிக்க முடியுமா

6.65 ஒற்றுமை கலைந்தால்

6.66 எண்ணத்தில் பொருத்தம்

6.67 வழி தேடும் காதல்

6.68 துணை தேடுதே!

6.69 அன்பு வளருமா?

6.70 வளையல் போடும் சண்டை

6.71 அழகு வந்தது

6.72 பருவம் வாடுது


7. நகைச்சுவை

7.1 குட்டு வெளியாகும்.

7.2 வீட்டுக்குள் வீரம்.

7.3 கடல் ஆழமும் பெண் மனமும்

7.4 வேலையற்ற மச்சான்,

7.5 வெளுத்துக் கட்றாண்டி

7.6 காக்காய் பிடித்து!

7.7 கலை!

7.8 நாடகம் பார்க்க

7.9 சூடேற்றும் பார்வை!

7.10 குடும்பத்தோடு பயணம்


8. தத்துவம்

8.1 எது சொந்தம்!

8.2 மனக்குரங்கு

8.3 போலிகளும் காலிகளும்

8.4 வரவும் செலவும்

8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்

8.6 இனிப்பும் கசப்பும்

8.7 உண்மை

8.8 விண் அனுதாபம்!

8.9 வெறும் பேச்சு!

8.10 துணிச்சல்

8.11 துன்பத்தை மிதி!

8.12 பொறுமை பொங்கினால்!

8.13 கற்பின் விலை

8.14 வெற்றி எங்கள் கையிலே

8.15 சோம்பல் ஒழிக

8.16 ஒற்றுமை..

8.17 நிழலும் வெயிலும்

8.18ஆரம்பமும் முடிவும்!

8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை

8.20 தேன் கலசம்

8.21 எது வேண்டும்?

8.22 நிலையில்லா உலகம்!

9. தனிப் பாடல்கள்

9.1 புதிய ஒளி வீசுது பார்!

9.2 நண்டு செய்த தொண்டு

9.3 வெஞ்சிறை உடைந்தது

9.4பெண்

9.5 மனித சக்தி

9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி

9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது

9.8 பாரதி

9.9 என் விருப்பம்

9.10 கொதிக்கும் தார்

9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!

9.12 நடுவில் இருக்கும் சாமி.

9.13 நாலு முழ வேட்டி

9.14 படத் தொழில் வளர

9.15 அகராதியைக் கிழிக்கும்

9.16 தீயார்

9.17 சாதி மயக்கம்

9.18 அடிமை விலங்கு ஒடிந்தது

9.19 வாழவிடு

9.20 பின்னாலே கண்ணு

9.21 இருள் வர அஞ்சும்

9.22 காலத்திலே செல்லுட

9.23 உன்னை நீ!

9.24 இறைவனுக்கு நன்றி

9.25 நல்லவரைப் போற்றுவோம்.

9.26 ஜீவா

9.27 கவிஞரின் முதல் கவிதை

9.28 கவிஞரின் இறுதிக் கவிதை

 

0 responses to “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »