நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | அ.கி.பரந்தாமனார்

நல்ல-தமிழ்-எழுத-வேண்டுமா-அ.கி.பரந்தாமனார்

 

           “நல்ல தமிழ் வழங்கும் நாடு” என்று பல்லோ ராலும் பாராட்டப் பெறுகின்ற பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்து வருகின்றது “நல்ல தமிழ் எழுத வேண்டுமா?” என்னும் இந்நூல். மதுரைமா நகரில் தமிழ்ப்பெருமகனாகத் திகழும் திரு. தியாகராச செட்டியார் அவர்கள் நிறுவிய கல்லூரியில் ஆர்வமுறத் தமிழ்ப்பணியாற்றும் அறிஞர் அ.கி.பரந்தாமனுர், வழுவின்றித் தமிழ் எழுத இந்நூலில் வழிகாட்டுகின்றார்.  நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | அ.கி.பரந்தாமனார் 


            தமிழ்மொழி, ஆட்சி மொழியாகும் காலம் நெருங்கிவிட்டது. தமிழ் வெளியீடுகளும் நாளிதழ் களும் நல்ல தமிழில் வெளிவரல் வேண்டும். எழுத்தாளர்கள் பிழையின்றி எழுதவேண்டுமானால், ஓரளவு நடைமுறை இலக்கணம் தெரிந்துகொள்ளு தல் இன்றியமையாதது.

            இந்நூலாசிரியர் நீண்டகால அனுபவம் வாய்ந்த வர். எனவே, பெருவரவாகக் காணப்படும் பிழை களை இவர் இந்நூலில் எடுத்துக்காட்டித் திருத்தங் களையும் கொடுத்துள்ளார்; வல்லெழுத்து மிகும் இடங்களையும் மிகாத இடங்களையும் எளிய முறை யில் விளக்கியுள்ளார்; சந்தி முறைகளை மிக எளிதா கக் காட்டியுள்ளார்; சொற்றொடர்ப்பிரிப்புக்களில் ஏற்படும் தவறுகளை எடுத்துக்காட்டி விதிகளையும் வகுத்துள்ளார். ஆதலால், நல்ல தமிழ் எழுத விரும்பும் பலர்க்கும் இந்நூல் பயன்படக் கூடியது.

            காலத்திற்கேற்ற இந்நூலைக் கற்றுத் தமிழகம் நற்றமிழைப் பேணி வளர்க்கும் என்று நம்புகிறேன்.

உயர்திரு. ரா. பி. சேதுப்பிள்ளை B.A., B.L., அவர்கள்,

தமிழ்ப் பேராசிரியர்,

சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை.

 

இண்டாம் பதிப்பு முன்னுரை


            நல்ல தமிழ் எழுத வேண்டுமா?” என்னும் இந்நூலின் முதற்பதிப்புக்கு, நம் நாட்டிலும் வெளி நாட்டிலும் வாழும் தமிழார்வம் மிக்க அன்பர்கள் காட்டிய பேராதரவைக் கண்டு பெருமகிழ்ச்சியடை கிறேன்.நாம் எதிர்பார்த்தவாறு தமிழ்மொழி 1956 டிசம்பரில் ஆட்சி மொழியாகிவிட்டது. பலரும் வழு வின்றி நல்ல தமிழ் எழுதும் திறமை பெறவேண்டு வது இன்றியமையாததாகிறது.

            ஆதலால், மேலும் இந்நூல் பயனளிக்கும் முறையில் ‘சில தமிழாட்சிச் சொற்கள்’ என்னும் அதிகாரத்தைச் சேர்த்ததோடு, ஐயமுறும் சொற்களின் அகரவரிசையில் புதியன வாக வேறுசில சொற்களைப் புகுத்தியும், ஆங்காங் குப் பல திருத்தங்களைச் செய்தும் இதனை விரிவாக்கி இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளேன். முன் போல் இப்பதிப்புக்கும் ஆதரவளிக்குமாறு அன்பர் களைவேண்டுகிறேன்.

            இப்பதிப்பின் அச்சுப்படிகளை அவ்வப்போது செவ்வையாகத் திருத்தியுதவிய அன்பர் மதுரை மு. வீரமணி அவர்களுக்கு என் வாழ்த்தும் நன்றியும் உரித்தாகுக.


தியாகராசர் கல்லூரி,                                                                                             அன்புள்ள,

மதுரை.                                                                                                            அ. கி. பரந்தாமனார்.

15-3-1957.

பொருளடக்கம்


அணிந்துரை
இரண்டாம் பதிப்பு முன்னுரை

முதற்பதிப்பு முன்னுரை

உரித்தாக்கல்

1.தமிழ்மொழியின் தனிப்பண்புகள்

            தமிழ் மொழியைக் குறித்துப் பலர் கூறியவை – தமிழிலக்கணம் கற்க வேண்டிய இன்றியமையாமை.


2 உரை நடை வரலாறு

            சங்ககாலம் முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில்.

3. மூன்று உரை நடை இயக்கங்கள்

            கொச்சை மொழி இயக்கம் – தனித்தமிழ் மொழி இயக்கம் – நடுவழி மொழி இயக்கம்.

4. அஞ்சவேண்டாம்

            தமிழிலக்கணச் சிறப்பு – இலக்கணம் கற்க வேண்டுவதற்குக் காரணம்.

5. அளவான இலக்கணம்

            எழுத்து: உயிர், மெய், குற்றியலுகரம், முற்றியலுகரம், சொல்லுக்கு முதலில் இடையில் ஈற்றில் வரும் எழுத்துக்கள், போலி. சொல் : பெயர் வினை இடை உரிச்சொற்கள். தொடரிலக்கணம்.

6. சேர்த்துவைத்த குப்பை

            எழுத்துப் பிழைகள் வாராதிருக்கச் சில வழிகள் – தமிழ் நெடுங்கணக்கு பிழையும் திருத்தமும்- இரு வகை யாக எழுதும் சொற்கள்.

7. விட்டுவிட்ட குப்பை

            பெருவரவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளும் திருத்தங்களும் – ரகர
றகர வேறுபாடுகள் லகர ளகர ழகர வேறுபாடுகள்.

8. செல்லாத காசுகள்

பிழையான சொற்களும் திருத்தங்களும்.

9. பயன் படுத்தும் பாங்கு

            சொற்களைச் சரியாகப் பயன்படுத்தும் பாங்கு – ஏற்ற வினைச் சொற்கள்
துணை வினைகளைப் பயன்படுத்தும் முறை.

10. வடசொல் உதவி

            வடசொல் தமிழில் புகுந்த வரலாறு வடசொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்.

11. நெல்லொடு கற்கள்

            தமிழில் பிறமொழிச் சொற்கள் புகுந்த விதம் போர்த்துகீசியச் சொற் களும் தெலுங்குச் சொற்களும் கன் னடச் சொற்களும் உருதுச் சொற் களும் அவற்றிற்கு நேரான தமிழ்ச் சொற்களும்.

12. கலைச்சொற்களும் ஆட்சிச்சொற்களும்

            மருத்துவம் – அரசியல் – நிலையங்கள் கல்வி-ஆட்சி முறை.

13. சில தமிழாட்சிச்சொற்கள்

            அலுவலகம் – நிலையங்கள் – அலுவலர் திட்டங்கள்.

14. வலி மிகுதல் I

            பிழைகளும் திருத்தங்களும்.

15. வலிமிகுதல் II

            வல்லெழுத்து மிகுதற்குச் சில விதிகள்.

16. வலிமிகுதலும் மிகாமையும்

வல்லெழுத்து மிக வேண்டிய இடங்களும் மிகாதிருக்க வேண்டிய இடங்களும்.

17. பிழையும் திருத்தமும்

            வல்லெழுத்து மிகும் இடங்களில் வரும் பிழைகளும் திருத்தங்களும் – வல் லெழுத்து மிகுதற்கு விதிகள் – வலி மிகும் தொடர்கள் வரிசை.

18. வலிமிகாத இடங்கள்

            வல்லெழுத்து மிகாமைக்கு விதிகள் – வலிமிகாத தொடர்கள் வரிசை.

19. எளிய சந்தி விதிகள்

            தோன்றல்: உடம்படுமெய் – கெடுதல்- திரிதல்.


20. சில சந்தி முறைகள்

            தோன்றல், கெடுதல், திரிதல் (விரிவாக).

32. இனிய சொற்றொடரும் மரபுத் தொடரும்

33.உவமைகள்

34. பழமொழிகள்

35. உரை நடையில் கவனிக்க வேண்டியவை

            டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் கூறியது- K. S. சீனிவாச பிள்ளை அவர்கள் எழுதியது.

36. மாதிரி உரை நடை

            ரா. பி. சேதுப்பிள்ளை- திரு. வி. க.- மு. இராகவ ஐயங்கார்-கா. சுப்பிர மணியம் பிள்ளை – மறைமலையடிகள் மறு மலர்ச்சி எழுத்தாளர்.

37. சிறுகதை எழுதுதல்

38. வாழ்க்கை வரலாறு எழுதும் முறை

39. நகைச்சுவை இலக்கியம் எழுதுதல்

40. நாடகம் எழுதும் நன்முறை

41. எழுத்தாளர்களுக்கு

42. முடிவுரை

 

பிற்சேர்க்கை -ஐயமுறும் சொற்கள் அகர வரிசை (A list of words of Doubtful Spelling)

 

நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


அ.கி.பரந்தாமனார் எம்., எம்.ஏ.,

விற்பனை உரிமை

மலர் நிலையம்

33. பிராட்வே, சென்னை-1

முதற் பதிப்பு: ஜனவரி 1955.

இரண்டாம் பதிப்பு: மார்ச்சு, 1957

விலை ரூ.3-12-0


வெளியீடுவோர்

தமிழ் இந்தியா பதிப்பகம்,

18, முத்து முதலி தெரு, புரசை, சென்னை-7.

 

0 responses to “நல்ல தமிழ் எழுத வேண்டுமா? | அ.கி.பரந்தாமனார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »