நன்னூல் விருத்தியுரை
பொதுப்பாயிரம்
“முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்”
என்பது சூத்திரம். என்னுதலுற்றோவெனின்: பாயிரத்துக்கு ரூஉங் காரணக்குறிகளுணர்த்துதனுதலிற்று. நன்னூல் விருத்தியுரை pdf
இதன்பொருள்
பாயிரத்தின் இலக்கணங்களை முன்னுணர்ந் தல்லது நூல்களைச் செய்தலும் அவற்றையீதலும் ஏற்றலு முடியாமை கருதி முன்னுரைத்தலின் முகவுரையென்றும், “பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் – தொகுதியாகச் சொல்லுத றானே” என்பவாகலின், மேல் வகுக்கும் ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பல்வகைப் பொருளையுந் தொகுத்துச் சொல்லுதலிற் பதிகமென்றும், நூலினது பெருமை முதலிய விளங்க அணிந்துரைத்தலின் அணிந் துரையென்றும், முகவுரையென்றார்போல நூன்முக மென்றும், நூனுதலிய பொருளல்லனவற்றை உரைத்தலிற் புறவுரை யென்றும், நூற்குள்ள நுதலிய பொருளல்லன வற்றை அதற்குத் தந்துரைத்தலிற் றந்துரையென்றும், அணிந்துரையென்றார்போலப் புனைந்துரையென்றும், ரத்துக்குப் பெயராம் என்றவாறு. பாயிரமென்பது
வரலாறு.
பாயிரங் கூறப் புகுந்தார் நிகண்டுபோல அதன் பெயர் விகற் பங்களைக் கூறியதென்னையெனின்:—இப்பாயிரம், பதிகமாகிய புற வுரையாய்த் தந்துரைக்கப்படுவதேனும், நூற்கு இன்றியமையாத அணியாய் முன்னுரைக்கப்படுவ தென்பது, இக்காரணக்குறிக ளான் விளங்குதலினென்க,
நூலினது வரலாறு
நூலி னியல்பே நூவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியினோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை வி
ருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.
மதம் ஏழு
எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தா
அனாட்டித் தனது நிறுப்பே
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே
பிறர் நூற் குற்றங் காட்ட லேனைப்
பிறிதொடு படா அன் றன்மதங் கொளலே.
குற்றம் பத்து
குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
வழுஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத்தொடுத்தன் மற்றொன்று விரித்தல்
அழகு பத்து
சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்
நவின்றோர்க்கினிமைநன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல்
முறையின் வைப்பே யுலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
தாகுத னூலிற் கழகெனும் பத்தே.
32 வகையான உத்திகள்
நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற்புணர்த்
இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்க லெதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின்முடித்தன் முடிந்ததுமுடித்தல்
உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்
ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்
ஒன்றின முடித்த றன்னின முடித்தல்
உய்த்துணரவைப்பென வுத்தியெண்ணான்கே.
உத்தி விளக்கம்
நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி.
ஓத்து விளக்கம்
நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.
படலம் விளக்கம்
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரினதுபடல மாகும்.
சூத்திர விளக்கம்
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ னடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்.
ஆசிரியனது வரலாறு
குலனரு டெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன மலர்நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அ
மைபவனூலுரை யாசிரி யன்னே.
மாணாக்கனது வரலாறு
தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடுவோனே
உரைகோளாளற் குரைப்பது நூலே.
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலிச் சங்கரநமச்சிவாயப்புலவராற் செய்து திருவாவடுதுறையாதீனத்துச்
சிவஞானசுவாமிகளால் திருத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுகநாவலரவர்கள்
பரிசோதித்தபடி
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர்
௪. பொன்னுஸ்வாமி அவர்களால்
சென்னை
வித்தியாநுபாலன அச்சகத்தில்
அச்சிடப்பட்டது.
Leave a Reply