துளு நாட்டு வரலாறு pdf

துளு நாட்டு வரலாறு_மயிலை சீனி வேங்கடசாமி

துளு நாட்டு வரலாறு

மயிலை சீனி.வேங்கடசாமி

             துளு நாடு என்றும் கொங்கண நாடு என்றும் தமிழ்ச்சங்க காலத்துத் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடாகிய பழைய சேரநாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த பழைய சேர நாடு பிற்காலத்திலே மலையாள நாடாக மாறித் தனியாகப் பிரிந்து போய்விட்டது போலவே பழைய தமிழகத்துடன் இணைந் திருந்த துளு நாடும் பிற்காலத்திலே பிரிந்து தனியாகப் போய்விட்டது. ஆனால், பழைய சங்கத் தமிழ் இலக்கியங்கள் துளு நாடு தமிழகத் துடன் கொண்டிருந்த உறவை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.  துளு நாட்டு வரலாறு 

துளு நாடு
துளு நாடு தாலுகா


நானூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணைநானூறு குறுந்தொகை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே சில செய்யுட்களில் துளு நாட்டைப் பற்றிய செய்திகள் தற்செயலாகக் கூறப் பட்டுள்ளன. அச்செய்திகள் தற்செயலாகப் புலவர்களால் கூறப்பட்டவை. ஆகவே, அக்காலத்துத் துளு நாட்டின் முழு வரலாறு அச்செய்யுள்களில் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை வரலாற்றுத் துணுக்குகளேயாகும். துளு நாட்டு வரலாறு


சங்கச் செய்யுள்களிலே ஆங்காங்கே சிதறிக் கிடக்கிற அவ் வரலாற்றுத் துணுக்குகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டித் தொகுத்து முறையாக வகைப்படுத்தி எழுதப்பட்டதுதான் துளு நாட்டு வரலாறு என்னும் இச்சிறுநூல். இந்நூலுக்கு இது தவறான பெயர். சரியாகப் பெயர் கூறவேண்டுமானால் சங்க காலத்துத் துளு நாடு அல்லது கி. பி. 2ஆம் நூற்றாண்டுத் துளு நாடு என்று
இதற்குப் பெயர் சூட்டப்படவேண்டும். ஏறத்தாழ கி. பி. 100 முதல் 150 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த துளு நாட்டின் செய்தி இந்நூலில் கூறப்படுகின்றது. அக் காலத்துக்கு முற்பட்ட துளு நாட்டு வரலாறு கிடைக்கவில்லை.

துளு-நாடு-மலைகளும்-ஆறுகளும்
துளு-நாடு-மலைகளும்-ஆறுகளும்


அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்ட அரசர்கள் கொங்கா ணங்கிழார் என்றும் நன்னன் என்றும் பெயர் பெற்றிருந்தார்கள். அவர்கள், அக்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் இருந்தே வேளிர் என்னும் குறுநில மன்னர்களைச் சேர்ந்தவர்கள். கொங்கணாங் கிழாராகிய நன்னர்கள், தங்களுடைய சிறிய துளு இராச்சியத்தைப் பெரிதாக விரிவுப்படுத்தக் கருதி, சேர நாட்டின் வடக்கிலிருந்த பூழி நாட்டையும், அதற்குக் கிழக்கில் இருந்த வடகொங்கு நாட்டையும் கைப் பற்றிக்கொண்டார்கள். ஆகவே, சேர அரசருக்கும் துளூ நாட்டரச ருக்கும் அரசியல் பகைமை ஏற்பட்டு அவ்விருவருக்கும் போர்கள் நிகழ்ந்தன. கடைசியில் சேர அரசர் துளு அரசர்களை வென்று தங்களுக்குக் கீழே அடக்கிவிட்டனர். இச்செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. துளு நாட்டு வரலாறு

அக்காலத்துத் துளு நாட்டு மக்களின் சமூக வரலாறு, நாகரிகம், பண்பாடு முதலியவை யெல்லாம் தமிழகத்துப் பண்பாட் டுடன் ஒத்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், துளு நாட்டுப் பண்பாடு, நாகரிகங்களைப் பற்றிச் சங்க நூல்கள் தனியாக ஒன்றும் கூறவில்லை. ஆகவே, அச்செய்திகள் இந்நூலில் இடம்பெறவில்லை. இந்நூலிலே சில செய்திகள் சிற்சில இடங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. மேற்கோளுக்காகவும் அனுவாதத்தின் பொருட்டும் ஆராய்ச்சிக்குச் சான்று காட்டும் பொருட்டும் சில செய்திகள் மீண்டும் மீண்டும் கூறவேண்டுவது அவசியமாகவுள்ளன. இவற்றைக் ‘கூறியது கூறல்” என்னும் குற்றமாகக் கருதக்கூடாது,

சதகர்ணி-ராச்சியம்
சதகர்ணி-ராச்சியம்


தனி இலக்கிய நூல்களுக்கே ‘கூறியது கூறல்’ என்னுங் குற்றம் பொருந்துமேயல்லாமல், சரித்திர ஆராய்ச்சி நூலாகிய இதுபோன்ற நூல்களுக்கு அக்குற்றத்தைச் சாற்றுவது கூடாது. வேண்டிய இடங் களில், கூறியதையே மீண்டும்மீண்டும் கூறாமற் போனால் தெளிவும் விளக்கமும் பெறமுடியாதாகையால் அவ்வாறு கூறவேண்டுவது அவசியமாயிற்று.
இந்நூலுக்கு ஓர் அணிந்துரை எழுதிக் தரவேண்டுமென்று வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே. கே. பிள்ளையவர்களைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவர்கள் அணிந்துரை எழுதி யுதவினார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி.


சென்னை                                                                           -மயிலை சீனி. வேங்கடசாமி
27.01.96

பொருளடக்கம்

முகவுரை

துளுநாடு

நன்னர் வரலாறு

நன்னர் காலம்

நன்னரைப் பற்றிய செய்யுட்கள்

துளு மொழியும் தமிழ் மொழியும்

இணைப்பு

 

துளு நாட்டு வரலாறு

மயிலை சீனி.வேங்கடசாமி

 

0 responses to “துளு நாட்டு வரலாறு pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »