திருவாசகம் மூலமும் உரையும்
மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் (8-ஆம் திருமுறை) (கி.பி9) இயற்பெயர் தெரியவில்லை. திருவாதவூர் சொந்த ஊர். எனவே திருவாதவூரர் எனப்படுகிறார். கி.பி. 9.ஆம் நூற்றாண்டினர். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்து தென்னவன் பிரம்மராயன் என்னும் பட்டம் பெற்றார்.பாண்டியன், வாதவூரரிடம் குதிரைகள் வாங்கப் பணத்தைக் கொடுத்தனுப்பினான். திருவாசகம் மூலமும் உரையும் pdf
செல்லும் வழியில் திருப்பெருந்துறை குருந்த மரத்தடியில் இறைவனே ஞானாசிரியராக வந்து மெய்ஞ்ஞானம் அருளினார். எனவே குதிரைப் பணத்தைச் சிவப்பணிகளுக்கு வாதவூரர் செலவிட்டார். இதனை அறிந்த அரிமர்த்தனன் வாதவூரரைச் சிறையிலிட்டான். இவருக்காக இறைவன் நரிகளைப் பரி(குதிரை)களாக்கிப் பாண்டியனிடம் ஒப்படைத்தார். அவை இரவில் நரிகளாகவே மாறிக் கானகம் புகுந்தன.பாண்டியன் கோபமுற்று வாதவூரர் முதுகில் கல்லைக்கட்டி வையையில் நிற்க வைத்தான்.
சினந்தெழுந்த இறைவன் வையையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.வந்திக்கிழவியின் பொருட்டுப் பிட்டுக்கு மண்சுமக்க வந்தும், பிரம்படி பட்டும் இறைவன் திருவிளையாடல்கள் புரிந்து வாதவூரரைக் காத்தார். மாணிக்கவாசகர் தனது இறையனுபவங்களைத் (அ) திருவாசகம் (ஆ)திருக்கோவையார் என்னும் இரு நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
திருவாசகம்
பெருந்துறையில் ஞான உபதேசம் அருளியதன் வாயிலாக இறைவன் ஆட்கொண்டதால் திருவாதவூரர் திருவாசகம் பாடினார். திருவாசகத்தில் தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், திருவாசகத்தில் நாட்டுப்புறக் கூறுகள்:
பூவல்லி கொய்தல், அம்மானை ஆடல், ஊசலாடல் முதலான நாட்டுப்புற தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம்,
விளையாடல்கள் பாடல்கள் வடிவில் தரப்பட்டுள்ளன.
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!
என்னும் பாடல் தும்பி ஊதுதல் என்னும் நாட்டுப்புற விளையாட்டை அடிப்படையாக வைத்து எழுந்த திருக்கோத்தும்பிப் பாடலாகும்.
திருவாசகத்தின் சிறப்பு
(1) திருவாசகத்தில் நெஞ்சம் நெகிழ்ந்த ஜி.யு. போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
(2) இராமலிங்க வள்ளலார் திருவாசகத்தின் இனிமையை,
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
எனப் போற்றுகிறார்.
(3) திருவாசகம் ஓதும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை,
திருவா சகம்இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துஉகக் கண்கள்
தொடுமணல் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி
என்று சிவப்பிரகாசர் சிறப்பித்துக் கூறுகிறார்.
(4) மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப்பாடல்கள் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிவடையும்.
திருக்கோவையார்
பாவை பாடிய வாயால் கோவை பாடுக என கேட்டுக் கொண்டார். திருச்சிற்றம்பலக் கோவை எனவும்படும். இறைவன் ஆன்மாவைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் நாயகன்-நாயகி பாவம் அமைந்த 400 அகத்துறைக் கோவைப் பாடல் இது. எனவே, மாணிக்கவாசகர் திருக்கோவையார் பாடினார் கோவைச் சிற்றிலக்கியங்களில் மூத்தது இந்நூல். தொல்காப்பியம் திருக்குறளுக்கு ஒப்பானது திருக்கோவையார்.
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
Leave a Reply