திருக்குறள் பாரயாணமுறைகள்

திருக்குறள் பாரயாண முறைகள்

திருக்குறள் பாரயாணமுறைகள்


            ஒழுக்கங்களும் அறிவும் உடைமையாகி வாழ்க்கையை மேம்படுத்தும். திருக்குறளை ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளுடன் வீட்டில் இங்குள்ள 90 குறள்களை உரக்க ஓதுங்கள். இதற்கு தேவையான நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே. கல்வி மேம்பாட்டிற்கு தேவையான நினைவாற்றல் எளிமையாக பெருகும். நினைவாற்றலுக்கும் மொழி உச்சரிப்புக்கும் சிறந்த பயிற்சியாகும். வாழ்க்கையில் ஒழுக்கக்கேடாக, நடக்காமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி இக்குறள்கள் வழிநடத்தும்.

வழிமுறைகள்

            வயது வேறுபாடுகள் இல்லை. அனைவருக்கும் பொருந்தும். தினசரி, காலை வசதியான நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள். சிறிது நீரை குடித்துக்கொள்ளுங்கள். ஒருமுறை இங்குள்ள 9 அதிகாரங்களையும், புத்தகத்தைப் பார்த்து, மெதுவாக வாய்விட்டு ஓதுங்கள். 5 நிமிடங்கள் போதும். எந்த சடங்குகளும் வேண்டாம்.

            ஒருவாரத்திற்கு பின், புத்தகதை பார்க்காமல் ஓதுங்கள். நினைவாற்றலை வெளிப்படுத்தும். குறை இருப்பின், பார்த்து ஓதுங்கள். குழந்தைகளுக்கு அறிவுக்கும் கட்டாயம். நினைவாற்றல் மதிப்பெண்களுக்குக், பெரியவர்கள் இந்த நினைவாற்றலை நிலைநிறுத்துவதில்லை. ஆனால், தன்னம்பிக்கைக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம்.


            பெற்றோர்கள் படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு, நீங்கள் ஒவ்வொரு வரியாக வாசித்து, திரும்ப சொல்ல வையுங்கள். தவறுகள் கண்டுபிடிக்க வேண்டாம். உச்சரிப்புக்களை மட்டும் தெளிவாக்குங்கள். தெளிவான உச்சரிப்புதெளிவான சிந்தனைகளை உருவாக்கும். குரல்வளம் மேம்படும். இதுவே சிறந்த மூச்சுப்பயிற்சியும் ஆகும். ஒருவாரத்திற்கு பின், சுயமாக சொல்லச்செய்யுங்கள். சோதிக்க இயலும். நினைவாற்றலை நினைவாற்றலை உருவாக்குங்கள்.

            இந்த ஒன்பது அதிகாரத்தில் உள்ள 650 வார்த்தைகளில் உள்ளன; 3000க்கு அதிகமான உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் சரியான விகிதமுறையில் மூச்சை உள்வாங்கி, வெளியிட வைக்கின்றன.

            இதன்மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் காற்று சென்று, சக்தியை அளித்து, சுத்திகரிப்பும் செய்யும். இந்தப் பயிற்சியின் மூலம் நோய்நொடிகளையும் நீக்கும். உங்களின் செயல்பாடுகளில் இதன் பலனையும் மாற்றங்களையும் விரைவில் உணர்வீர்கள்.

திருக்குறள் பாரயாண முறைகள்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்

அவரவர் எண்ணங்களே

மனம் போல் மாங்கலயம் என்பது பழமொழி.

Education isn’t always about the capacity to think,

but the choice of what to think about.


இதன் அடிப்படையில் கல்விப் பாடத்திட்டத்தில், மாணவர்களின் மனதில் நல்லெண்ணங்களை விதைக்க, சான்றோர்களின், சாதனையாளர்களின், விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆனால், நோக்கங்கள் செயல்படவில்லை. இது மாணவர்களுக்கு மதிப்பெண் பாரமாகி, அவர்கள் கொடூரர்களாக தெரிகின்றனர்.

திரைக்கேளிக்கை பிம்பங்கள், குரங்குகள் ஊடகப்பிம்பங்கள், பாலியல் பிம்பங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழிக்காட்டிகளாக உள்ளனர். இதன் எதிர்மறைவு அவர்களுக்கு விழிப்புணர்வினை அவர்களின் நடை, விளைவுகளை ஆசிரியர்கள் செய்வதில்லை. இதனால்,
உடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றன. இவைகளால் நாகரிகம் என்ற மாயை உருவாகிவிடுகிறது. பெற்றோர்களால் இவற்றை கட்டுப்படுத்த
முடிவதில்லை.


            கவர்ச்சி திரைப்பிம்பங்களின் வாழ்க்கை வரலாற்றை, பாலியல் வரலாற்றை, ஒழுக்கக்கேட்டை மாணவ, மாணவிகள் ரசித்து, பின்பற்றி, ரசிகர்களாகி, மன்றங்கள் அமைத்து, பொருட்செலவு செய்து, வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இதனை பெற்றோர்கள் தான் இளமையிலே தடுக்கவேண்டும். கண்காணிக்க வேண்டும். ஊக்குவிக்கக் கூடாது. ரசிக்கவும் அனுமதிக்காதீர். பார்த்தால் பார்க்கட்டும். விவாதிக்காதீர்.


            எடுத்துக்காட்டாக: காதில் கடுக்கன்: இது மேலை நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்களின் அடையாளமாக இருந்தது. திரைப்படங்களில் நடிகர்கள் போடுவதால், இது ரசிகர்களுக்கு கிருமியாக தொற்றிவிட்டது. முன்னாளில், மேலைநாடுகளில் ஜீன்ஸ் முரட்டு ஆடை கால்நடை மேய்ப்பாளர்களின் அடையாளமாக இருந்தது. இது காமவெறிக் கொண்ட வெறியர்கள், குணக் கேடர்கள் என்ற குணத்தை வெளிப்படுத்தியது. இதுபோல, நடிகைகளின் ஒப்பனை அரைகுறை கவர்ச்சி உடைகளை கண்டு, மாணவிகள் பின்பற்றுகின்றனர். இதன் விளைவு நடிக, நடிகைகளின் கேடான ஒழுக்கக்கேடுகளும் மனதில் பதிந்து, வழக்கமாகிவிடுகிறது. பாலியல் ஒழுக்கக்கேடுகள் வாழ்க்கையாகி விடுகிறது. கள்ள உறவுகள், மனமாற்றம், முன்னேற்றத்தடைகள், குடும்பச்சீரழிவுகள், மனநோய்கள், விவாகரத்து, நம்பகத்தன்மை, ஐயம் என பின்விளைவுகள் வாழ்நாள் முழுமைக்கும் பிணியாகிவிடுகிறது. இந்தப்பகுதியின் தலைப்புக்கு கருத்துக்கள் பல உண்டு.


           “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறார்.


            உடைமைகள் செல்வங்களாகும். மனிதன் உருவாக்க வேண்டிய உடைமைகள் யாவை? திருக்குறளில் கீழ்கண்ட அதிகாரங்களில் காணப்படுகின்றன.

1.அன்புடைமை

2.அடக்கவுடைமை

3. ஒழுக்கவுடைமை

4. பொறையுடைமை

5. அருளுடைமை

6. அறிவுடைமை

7. ஆள்விடையுடைமை

8. ஊக்கமுடைமை

9. பண்புடைமை


            மனதில் நல்ல எண்ணங்களை விதையுங்கள். பராமரிப்பு செய்யுங்கள். நோயில்லாமல் வளரும். வாழ்நாள் முழுவதும் வெற்றிகள் அறுவடைகளாகும்.


            எல்லோர் வீட்டிலும் திருக்குறள் இருக்கும். இல்லாவிட்டால், வாங்கிக் கொள்ளுங்கள். பெற்றோர்கள் இந்த 9 அதிகாரங்களையும் குழந்தைகளுடன் உட்கார்ந்து பாரயாணம் செய்யுங்கள். இந்த 90 குறட்களில் 650 சொற்கள் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு 200 சொற்களை உச்சரிக்கமுடியும். ஆக, பாரயாணம் செய்ய அதிகபட்சம் 5 நிமிடங்கள் மட்டுமே தேவை.


            பொதுவாக பாராயானம் என்பது பக்தி மார்க்கத்திற்கு உண்டானது. பாரயாணமுறைகள் எல்லா மதங்களிலும் உள்ளன. தமிழில் ஓதுதல் என்று பொருள்படும். தேவாரம், திருவாசகத்தை ஒதுதல் என்றே அழைப்பர். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்… என்பது மரபு.

ஓதுவது என்பது படிப்பது, படிப்பிப்பது, கற்பது, கற்றுக் கொடுப்பது என்பலவேறு பொருள்கள் உண்டு.

வேதம் ஒதுதல் என்பதே வழக்கு. அதாவது வேத பாராயணம் செய்வது, அந்தக் காலத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் இல்லை. வாய்வழி கேட்டே கல்வி பயின்றார்கள். அதுவும் இசையுடன். அவர்கள் வேத விற்பன்னர்கள் என்று அழைக்கப் பட்டனர். மோட்சம் அடையும் வழிமுறைகளாக கருதப்பட்டன. உழைக்கும் மக்களுக்கானது அல்ல. வயது இல்லை. யாரும் ஓதலாம்.


            இதுபோல, மந்திரங்கள் உண்டு. மனதில் (மன்) + வெற்றியையும் தடையை நீக்கும் (திரா) சக்தியான சொற்கள் தான் = மந்திரம். அவைகள் என்ன? அர்த்தமற்ற ஒலிகள். சமஸ்கிருத மந்திரங்களுக்கு அர்த்தமில்லை.ஒலிகள் மட்டும் சக்தியை அளிக்கின்றன என நம்புகின்றனர். உண்மைதானா? சாத்தியம் தானா? இல்லை. அவைகள் மேட்சத்திற்கான நம்பிக்கைகள். இவ்வுலக வாழ்க்கைக்கு அல்ல. மந்திரம் சொல்ல சடங்குகள் தேவை. சடங்குகள் இல்லாமல், ராம், சிவா, கிருஷ்னா என 108 தடவை போதுமானது என குறுக்கு வழியும் உள்ளது.


            மழலையர்களுக்கு ரைம்ஸ் சொல்லித் பொருளுக்கல்ல. உச்சரிப்புக்காக, ஒலி பழக மட்டுமே. தரப்படுகிறது. திருக்குறள் பாராயணம் இப்படியல்ல. இன்றைய நடைமுறை வாழ்க்கையை வழிநடத்தும். நல்ல எண்ணங்களை உருவாக்கும். ஆரோக்கியமான சிந்தனைகளை தூண்டும். மோட்சத்திற்கானது அல்ல. மனித குலமேம்பாட்டிற்கு உதவும். கல்வியை மேம்படுத்தும். தொழிலுக்கும், பணிகளுக்கும் உயர்வை அளிக்கும். தீயசக்திகள் அண்டாது. மனதில் நிற்கும் திருக்குறளை சூழ்நிலையில் மற்றவர்களிடம் உச்சரிக்கும்போது, உங்களின் மேன்மை வெளிப்படும். மதிக்கப்படுவீர்கள்.


முன்னர், குரு என்பவரே ஆசான். இன்று ஆசான்? குரு என்பதின் பொருள் என்ன? கு என்றால் ஆன்மிக இருட்டு; ௫ என்றால் நீக்குபவர். குருகுலக்கல்வி என்றால் ஆன்மிகக்கல்வியை சார்ந்தது ஆகும். யாருக்கும் இன்றைய கல்விமுறை வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டவே உள்ளது. மோட்சத்திற்கு அல்ல.

திருக்குறள் பாரயாணமுறைகள்

கருத்தும், தொகுப்பும்

திருக்குறள் சிந்தனைச்சிற்பி

D.R. ஆனந்தராஜ் ஆச்சாரியார்

புத்தக உரிமை உலகில் உள்ள அனைவருக்குமே

 

0 responses to “திருக்குறள் பாரயாணமுறைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »