தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு pdf

தமிழ்நாட்டு-இடப்பெயர்-ஆய்வு-திரு.இங்கர்சால்-நார்வே

தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு


            சிந்துவெளி நாகரிகத்தில் அதாவது இன்றைய இன்றைய பாகிஸ்தானில் இன்றளவிலும் பல்வேறு ஊர்கள் தமிழ் பெயர்களில் இருக்கிறது. ஆய்வாளர் பலர் அதனை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளி நாகரிகம் வரை தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று உறுதியளிக்கிறார்கள் அதேபோல உலகெங்கும் கப்பல் துறைமுகம் பல கரையோர ஊர்கள் பல தமிழ்ப் பெயர்களில் இருக்கிறது அதனை ஒரிசா பாலு போன்றவர்கள் ஆய்வு செய்து பட்டியலிட்டு இவைகள் தமிழர்கள் கடல்வழி உறவு கொண்ட ஊர்களின் பெயர்கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு pdf

            இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றை ஊர்களின் பெயர் வழி காண்கின்றோம். ஆனால் தமிழக ஊர்களை இடப் பெயர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் பல்வேறு பெயர்கள் தமிழல்லாத பெயர்களாக இருக்கிறது. குறிப்பாக தமிழர் அல்லாத ஆட்சி காலத்தில் சூட்டட்டப்பெயர்கள் நிறைய இருக்கிறது. நாயக்கர் ஆட்சி காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை இந்தப் பெயர் திணிப்பு நடந்து இருக்கிறது.

            அதுமட்டுமல்லாமல் பல்வேறு ஏற்றத்தாழ்வை சாதிய அடையாளங்களை தாங்கிய ஊர்கள் பெருகிக் கிடக்கிறது. இவற்றை ஆய்வு செய்து தலைப்பு வாரியாக பட்டியலிட்டுள்ளோம். அரசு இந்த தகவலை அடிப்படையாக வைத்து இதனை மேல் ஆராய்ச்சி செய்து ஏற்றத்தாழ்வு அல்லாத, சாதி அல்லாத, பிறமொழி அல்லாத, சமதர்ம தூயதமிழ் ஊர் பெயர்களை மீண்டும் சூட்ட வேண்டும் என்று வள்ளுவர் வள்ளலார் வட்டம் வேண்டுகோள் வைக்கிறது.

            இந்திய ஒன்றியத்திற்கே பேரு உதாரணமாக இருக்கக்கூடிய, சமூகநீதிக்கு ஏற்றத்தாழ்வின்மைக்கு பெயர் போன தமிழக அரசு செய்யும் என்று முழுமையாக நம்புகிறது. புதிதாக ஊர் பெயரை உருவாக்க உதவும் வகையில் கல்வெட்டு ஊர்கள் இலக்கிய ஊர்கள் பட்டியலையும் இந்த ஆவணத்தில் இணைத்துள்ளோம்

திரு.இங்கர்சால், நார்வே

வள்ளுவர் வள்ளலார் வட்டம்

 

பொருளடக்கம்


தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு

1. சாதி இடப்பெயர்கள்

2. விஜயநகர இடப்பெயர்கள்

3. ஆங்கில இடப்பெயர்கள்

4. ஏற்றத்தாழ்வு இடப்பெயர்கள்

5. இடப்பெயர்களில் அதிகம் காணும் பொது சொற்கள்

6. பறையர் இடப்பெயர்கள் 36

7. அட்டவணை SC ST இடப்பெயர்கள் 31

8. அரிசன/அரிஜன/ஹரிஜன் இடப்பெயர்கள் 142.

9. ஆதி திராவிட இடப்பெயர்கள் 1271

10. அம்பேத்கர் ஊர் 272

11.அருந்ததி இடப்பெயர்கள் 680

12. ஓட்டர் இடப்பெயர்கள் 57

13. இருளர் இடப்பெயர்கள் 457

14.அகதி இடப்பெயர்கள்

15. பள்ளர் இடப்பெயர்கள்

16.சேரி இடப்பெயர்கள் 780

17.ரெட்டி இடப்பெயர்கள் 433

18. வடுக இடப்பெயர்கள் 177

19. நாயக்க இடப்பெயர்கள் 1101

20. சமுத்திரம் ஊர் பெயர்கள் 258

21.கவுண்டர் இடப்பெயர்கள் 1355

22.வெள்ளாள இடப்பெயர்கள் 151

23.வன்னி இடப்பெயர்கள் 106

24. நாடார் இடப்பெயர்கள் 105

25. சாணார் இடப்பெயர்கள் 48

26. கம்மாள இடப்பெயர்கள் 40

27.செட்டி இடப்பெயர்கள் 517

28. தேவர் இடப்பெயர்கள் 45

29, அக்ரஹர இடப்பெயர்கள் 140

30. இடப்பெயர் முடியும் சொல்

31.கல்வெட்டு ஊர்ப்பெயர்கள்

32. இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்

33. தமிழகம் ஊரும் பேரும் ஊர்கள்

34. Referenceதமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு

தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே

 

0 responses to “தமிழ்நாட்டு இடப்பெயர் ஆய்வு pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »