தமிழரின் உருவ வழிபாடு pdf

தமிழரின் உருவ வழிபாடு எஸ் ஏ வி இளஞ்செழியன்


     என்னதான்திருத்தங்களும் மாற்றங்களும் சமயங்களுள் விளைந்தாலும் அல்லது திணிக்கப்பட்டிருந்தாலும்கூட இன்னமும் அடிப்படையாகிக் கிடப்பதென்னவோ இந்நிலத்து தொல்குடிமக்களின் ஆதிய வழிபாடாகத்தான் இருக்கிறது. அது பெற்ற பரிணாமங்களும்கூடப் புறந்தள்ளப்படவில்லை. அவ்வாறே, வட இந்தியத் தொல்குடிமக்களின் வழிபாடுகளான சிவத்துவமும் விஷ்ணுத்துவமும் இங்குப் பெரும்பான்மை பெற்றுக்கொண்டாலும் அல்லது பின்னர் வரையறை கண்ட முப்பெரும் தெய்வமரபில் முருகனைப் புறந்தள்ளினாலும் பண்டைய தமிழ் வேந்தர்களான பிற்காலப் பாண்டியர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலில் தங்களின் திருப்பணியாக முருகப்பெருமானுக்கெனத் தனித்த கோயில் எழுப்பி அதன் விமானத்தில் பொன் வேய்ந்ததையும் அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிடமுடியாது. தமிழரின் உருவ வழிபாடு pdf


சோழர்களின் பாவிக்கப்பட்டிருந்தமையை குலதெய்வம் என வரலாறும் ஆடல்வல்லான் இலக்கியமும் எடுத்தியம்புகின்றன. அவ்வாறே பாண்டியர்கள் பாண்டியர்குல நாயகம் என்ற பெயருடன் முருகப்பெருமானை அதே கோயிலில் தங்களின் குலதெய்வமாக எழுந்தருளச்செய்திருப்பதன் பின்னணியில் தொக்கி நிற்கும் தொல்லுணர்வு துருத்திய உளவியலைப் பகுத்துணர நாம் தவறிவிட்டோம்.

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வுகளில் எங்கும் இலிங்க உருவங்கள் கிடைத்ததாக அறியமுடியவில்லை. இது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவில் அமைந்திருந்த வட சிந்துவெளி நாகரிகத்தின் அகழாய்வுகளில் இலிங்க வடிவங்கள் கிடைத்திருப்பதனை உணர்தல் வேண்டும்; என்றால், வ இந்தியத் தொல்குடியினரில் ஒரு பிரிவினர் சிவ வழிபாடுடையோராகவும் தாய்த் தெய்வ வழிபாடுடையோராகவும் அறியப்படுகின்றனர்.

மூத்த கடவுள் இளையோனாகிப்போன முருகன் இங்குப் பின்வரைவால் கதை மறந்து மண்மூடிப்போனதெனினும் மண்ணகழ்வில் கிடைக்கும் மூலகங்களின் மூலமாகவும் சங்க இலக்கியங்களின் வாயிலாகவும் தென்தமிழர் அம் முருகவேளை முதன்மைக் கடவுளாகவே வணங்கிவந்துள்ளனர். பெண் தெய்வமான கொற்றவை மற்றொரு தொல்கடவுளாக வழிபடப்பட்டுவந்துள்ளாள்.

வட இந்தியாவில் கடும்பிரிவாக வரையறையாக வகைமைபெற்ற சிவத்துவ
ஆதிவழிபாட்டின் இறை அணுகியலானது மெய்யியல் முனைவோரால் சில சீர்த்திருத்தங்களைப் பெற்றுக்கொண்டது எனலாம். எனினும், அக் கடும் பிரிவு அதன் தன்மையிலேயே ஒருபுறம் நீடிக்கவும் செய்கிறது.

தாந்த்ரீகத்தினை அல்லாமல் ஆனால் அடிப்படையாக ஏற்றுக்கொண்டிருந்த கடும் பிரிவு மரபானது பின்னர் அரசமரபுகளால் செப்பனிடப்பட்டு உயர்நெறியாக நிலைபெற்ற நிலையில் அது சமூகத்திற்கான பொதுவழிபாட்டினை நல்கியிருந்தது. அவ்வகையில், அதனைச் சைவ நெறியாக அறியலாம். பின் வைணவமும் பிரிவுபெற இவ்விரு பெரும் பிரிவுகள் உயர் சமயங்களாக நிலைநிறுத்தம் பெற்றுக்கொண்டன. அவ்வாறு உயர்நெறிகளாக மாற்றம்பெற்றுக்கொண்ட நிலையில் எளிதாக எல்லாத்தரப்பினருக்கும் பொதுவாக அமையுமாறு அவற்றினைக் கொண்டுசேர்த்தோராக இடைக்காலத்தின் முற்பகுதியில் தோன்றிய ஆன்மிகச்சான்றோர்கள் காணப்படுகின்றனர். நாயன்மார்களும் சைவப்புலத்தின் வைணவப்புலத்தின் ஆழ்வார்களும் அத்தகைய தொண்டு புரிந்து வரலாறாய் மாறியிருப்பது கண்கூடு.

            தொடக்கத்தில் இயற்கை மூலகங்களின் மூலம் தம் இறைவழிபாட்டினை மரபுற்றிருந்த நம் முன்னோர்கள் காலமாற்றத்தினாலும் சூழலியல்பாலும் இயல்பான பரிணாமத்தினைத் திணிப்பின்றிப் பெற்றுவந்தனர். கந்து எனும் நெடுந்தடியை ஊன்றி அதனையே இறைவன் என வழிபட்டுவந்த மரபினைத்தான் வெகு முந்தைய வழிபாட்டு மரபாக நம்மால் அறியமுடிகிறது. அதற்கும் முந்தைய மரபாக மரங்களும் மலைகளும் ஆறுகளும் வழிபடும் மூலகங்களாக இருந்துள்ளன. மேலும், ஞாயிறும் திங்களும் முதன்மைக்கோள்களும் வழிபடப்பட்டிருந்தமையை இன்னபிற என நட்சத்திரங்களும் நாம் அறிந்துள்ளோம். மர வழிபாடு இன்னமும் தொடருகிற நிலையில் அது பெரும்பான்மையாக ஆலமரத்தினாலும் வேப்பமரத்தினாலும் இன்று அறியப்படுகின்றன. மலை வழிபாட்டினை இன்னமும் நம்மால் திருவண்ணாமலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி, பர்வதமலை போன்ற மலைகளால் காணமுடிகிறது. திருப்பரங்குன்றம் மலை காகபுஜண்டர் எனும் சித்தராக வழிபடப்படுவதாகவும் உள்ளூர் வாய்மொழி மரபால் அறியமுடிகிறது. வட இந்தியாவில் கைலாஷ் எனும் கயிலாய மலை சிவனுறையும் தலமாக வணங்கப்பட்டுவருவது அறிந்த ஒன்றே.


            தொல்நெறிகள் சில விழுக்காடுகளில் தொடர்ந்தாலும் அத்தொல்நெறி பரிணாமம் பெற்று இன்றைய சமயங்களாய் நிலைபெற்றிருக்கும் நிலையில் அவற்றிற்கான வழிபாட்டுமுறைகளும் கையோடு பரிணாமத்தினைப் பெற்று அல்லது வகுக்கப்பட்டும் வந்திருப்பதனை அறிந்துகொள்ளுதல் கடமையாகிறது. ஆக, இயற்கை வழிபாட்டுமுறையில் பிறவற்றினை விட மரங்களை வழிபடும் முறையே ஏகோபித்த பெரும்பான்மை பெற்றிருந்த நிலையில் அதன் பரிணாமமே

            சமயங்களின் வழிபாட்டியல் முறைமைகள் பண்படக் காரணமாக அமைந்ததெனலாம். என்றால், பின்னர் மர வழிபாடு வழிபடப்படும் அம்மரத்தின் நெடிய கிளை ஒன்றினை மட்டுமே வெட்டி ஊன்றி வழிபடும் மரபினை அடுத்ததாக்கியிருந்தது. இதனைத்தான் கந்து என வழங்கியிருந்தனர். “கந்து வழிபாடு நெடிய மரபாய்த் தொடர்ந்து கிடந்த நிலையில் அதில் இறைவனின் பாவை அல்லது ஓவிய உருவத்தினை வரைந்து வழிபடும் மரபினுள் நுழைந்த நிலையில்தான் இந்தியச் சிற்பக்கலை எனும் தனித்துவம் மிக்க மகோன்னதக் கலைப்புலம் உலக அரங்கில் மேதைமை பெற வழிவகுத்தது” என்றால், கந்திற்பாவை அதாவது கந்தில் பொறிக்கப்பட்ட பாவை (ஓவியம் அல்லது சிற்பம்) தமது அடுத்த பரிணாமமாகத் தனித்த ஓவியக்கலையையும் சிற்பக்கலையையும் தனித்தனியே பிரிவுகளாக்கிப் பெற்றுக்கொண்டது. தற்குறிப்பேற்றங்களும் இப்பாவை உச்ச மரபின் நுட்பத்துடன் ஆளுமையில் அரிதாய் நிகழ்த்திவைக்கப்பட்டன. ஆளும் வேந்தனொருவன் பெருவேந்தனாய் ஆசியக் கண்டத்தின் பெரும்பான்மையில் எட்டி நின்ற உச்சம், நெடிதுநின்ற மாண்பு என இன்னும் அவனது பிற அரும் முனைவுகள் தற்குறிப்பேற்றங்களாகப் பின்னிறுத்தப்பட்ட நிலையில் பாவை நெடும்பாவையாக உயர்த்தி நிறுத்தியிருந்தனர்.

இந் நெடும்பாவைப் படிமம் சிறப்புப் பரிணாமமாக இந்தியச் சிற்பக் குழுமத்தில் தனித்த இடத்தினைப் பெற்றிருந்தாலுங்கூட வரவுவைக்கப்படாமல் கிடக்கிறது. இத்தகைய வெகு அரிய நெடும்பாவை எனும் விஸ்வரூபச் விஸ்வரூபச் சிற்பங்கள்’ எனும் விரிவாய்ப் பேசினாலும் அரிய விளக்குகிறது இந்நூல். சிற்பங்களைச் *சோழர்கால எனது முந்தைய ஆய்வு நூல் சிறப்புத்தரவுகளுடன் மேலும் இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து தந்த திரு. வேணுகோபால் அவர்களுக்கும் நற்பதிப்பாக இந்நூலை வெளியீடு செய்திருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்

இணைப் பேராசிரியர்

கட்டடக்கலைத்துறை

தியாகராஜர் பொறியியற் கல்லூரி

மதுரை
09-03-2019

        எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் பாரம்பரியச் சிற்பக்கலையைப் பின்னணியாகக் கொண்டவர். இவரின் முதன்மை ஊடகங்கள் ஓவியமும் சிற்பமும். சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் நுண்கலைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். வரலாற்றுத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நாட்டின் முதன்மைப் பெருநகரங்களில் கலைக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார். ஆய்வு உயர்கல்வியைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிற்பத்துறையில் மேற்கொண்டு, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.


           தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கலை வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். ‘க்மெர்’ (Khmer) கலையை ஆய்வு செய்ய கம்போடியா நாட்டிற்குச் சென்று ‘அங்கோர்வாட்’ கோயிலைக் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரையையும் வெளியிட்டுள்ளார். இவை தவிர தமிழில் மூன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் எனக் கலை வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

தமிழரின் உருவ வழிபாடு

எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்

 (கந்து – கந்திற்பாவை – பாவை – நெடும்பாவை)

காலச்சுவடு பதிப்பகம்

மின்னஞ்சல்: sav.elanchezian6@gmail.com


தமிழரின் உருவ வழிபாடு: கந்து – கந்திற்பாவை – பாவை –  நெடும்பாவை – ஆய்வு நூல் – ஆசிரியர்: எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் – எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் – காலச்சுவடு முதல் பதிப்பு: டிசம்பர் 2019 – வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001

 

0 responses to “தமிழரின் உருவ வழிபாடு pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »