தமிழக கட்டிடக் கலைகள் pdf

தமிழக-கட்டிடக்-கலைகள்

    வாழ்க்கைக்கு மிகப் பயன்தரும் கலையாக விளங்குவது கட்டடக் கலையாகும். நாகரிகத்தின் கருவாக அது விளங்குவதால் அதன் சிறப்புக் கூறுகளைத் தெரிந்து கொள்வது நல்லது. தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் விளக்கப்படுகின்றன. தமிழக கட்டிடக் கலைகள் pdf

தமிழக கட்டிடக் கலைகள் pdf

            கட்டடக்கலையின் சிறப்பை உணர்வதற்கு நகர அமைப்பின் சிறப்பும் பாகுபாடுகளும் விளக்கப்படுகின்றன. இலக்கியங்களில் மதுரை, பூம்புகார் ஆகிய நகரங்கள் வருணிக்கப்படுதலும் சுட்டிக் காட்டப்படுகிறது.
தனி மனிதக் குடியிருப்புகளும் அரசர்களின் குடியிருப்பாகிய அரண்மனையும், நாட்டுப் பாதுகாப்பிற்கான அரண்களும் கூறப்படுகின்றன. வீரர்களுக்குரிய படைக் கருவிகள் கிடைக்கும் வண்ணம் படைக்கொட்டிலும் உள்ளது என்பதும் கூறப்படுகின்றது. மரக்கலம் (கப்பல்) செலுத்துபவர்களுக்குக் கடற்கரை தெரியும்படி ஒளிமிக்க விளக்கு உடைய கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் முற்காலத்திலேயே இருந்துள்ளது.

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

            கட்டடம், கட்டிடம் ஆகியவற்றுக்கு விளக்கம் தருகிறது. கட்டடக் கலைக் கொள்கையைப் புரிந்து கொள்ளத் துணை செய்கிறது.

தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப ஐந்திணைக்குரிய நிலப்பகுதியில் மக்கள் வாழும் இடங்களை விளக்குகிறது.

            கட்டடக் கலை வரலாற்றுக்கு அடிப்படையான நகர அமைப்பையும், அதன் வகைகளையும் கூறுகிறது.

 மதுரை, புகார் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களைப் பெருமை கொள்ளச் செய்த கட்டடங்களைப் பற்றிய சில விவரங்கள் தருகின்றது.

பண்டைய சங்க கால மக்கள் தமக்காகக் கட்டிக் கொண்ட வீடுகளைக் குறித்த செய்திகளைக் கூறுகின்றது.

நாட்டுப் பாதுகாப்பிற்கான அரண்கள், மன்னரின் அரண்மனை பற்றிய சில செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

அரசர்களின் படைக் கருவிகள் பாதுகாத்து வைத்தற்குரிய இடங்கள் பற்றியும் தெரிவிக்கின்றது.

கடலில் செல்லும் மரக்கலம் கரைக்கு வருவதற்கு உதவும் கலங்கரைவிளக்கம் பற்றிப் பேசுகிறது.

தமிழகத்தின் நீர் மலோண்மையை எடுத்துக்காட்டுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

பழங்காலத் தமிழகத்தின் கட்டடக் கலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

பழந்தமிழ் நாட்டு மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்பத் தங்களுக்குக் கட்டிக் கொண்ட வீடுகள் / இருப்பிடங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

கட்டடக் கலை வரலாறு குறித்து விளங்கிக் கொள்ள முடியும்.

பழைய காலத்தில் சிறந்து விளங்கிய மதுரை, புகார் நகரங்களின் கட்டடங்களைக் குறித்து அறிய வாய்ப்புக் கிட்டுகின்றது.

 மேலும் அரண்கள், படைக்கருவிகளின் பாதுகாப்பு இடங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

கட்டிடக்கலைக் கொள்கைகள்

            உலகத்தில் அறிவியல் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. கலைகள் பற்றிய வரலாற்றையும் கொள்கைகளையும் திறனாய்வுகளையும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு, தாம் கண்ட முடிவுகளைக் கூறி வருகின்றனர்.

தொன்மை

            மனிதனது வாழ்வியலுடன் ஒட்டி வளர்ந்த தொன்மையான கவின் கலையாகக் ‘கட்டடக் கலை” போற்றப்படுகின்றது. மனிதன் முல்லை நிலத்தில் வாழக்கற்றுக் கொண்ட காலத்திலேயே (chalcolithic age) தனக்கெனக் குடிசையோ வீடோ கட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதற்கேற்ப அவனது கட்டடக் கலை அறிவும் வளர்ந்து வந்துள்ளது.


            சங்க காலத்தில் மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், கோட்டை கொத்தளங்களும், அரண்மனைகளும் இருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் கூறுகின்றன. ஆனால், இன்றைக்கு அவற்றின் இடி பாடுகள் கூடக் கிடைக்கவில்லை.

பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோர் கட்டிய ஆலயங்கள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள், பாதுகாப்பு வழங்கிய கோட்டை கொத்தளங்கள் எங்கே? ஒன்று கூட இருந்த இடம் தெரியவில்லை.

            இந்நிலையில் பல்லவ மன்னர்கள் குடைவரைகளையும் ஒற்றைக்
கல்கோயில்களையும் கட்டுமானக் கோயில்களையும் பாறைக் கற்களால் உருவாக்கித் தந்துள்ளனர். அவற்றைக் கொண்டுதான் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை உருவாகி வளர்ச்சி பெற்று வருகின்றது என்பது தெளிவு; இதனையே கட்டடக் கலைக் கொள்கையாகக் கொள்ள வேண்டுமென்பர்.

பொருளடக்கம்

1.0 பாட முன்னுரை

1.1 கட்டடம்,

1.2 ஐந்திணைகளும் குடியிருப்புகளும்,

1.3 நகர அமைப்பும்,அதன் வகைகளும்.

1.4 சங்க கால வீட்டமைப்பு,

1.5 மூவேந்தர்களும் கோட்டையும்

1.6 கலங்கரை விளக்கம்.

1.7 நீர்ப்பாசனமும் கட்டடக் கலையும்.

1.8 தொகுப்புரை:

2.0 பாட முன்னுரை

2.1 நகரக் கட்கலை

2.2 கோட்டைகளில் பொறிகள்

2.3 திருமலை நாயக்கர் மகால்,

2.4 பிராகாரம்.

2.5 தீர்த்தங்களும், கட்டடக் கலை நுட்பமும்

2.6 சத்திய ஞானசபை

2.7 திருமடங்களும் ஆசிரமங்களும்,

2.8 நிலவறை

29 தொகுப்புரை

3.0 பாட முன்னுரை

3.1 கட்டடக் கலை

3.2 ஆலயக் கட்டடங்கள்

33 பல்லவர் காலக் கற்கோயில்கள்

3.4 கோயில் அமைப்பின் வளர்ச்சி

3.5 சோழர் காலக் கட்டடக் கலை

3.6 தொகுப்புரை

4.0 பாடமுன்னுரை

4.1 சோழர் கோயிற் பணிகள்

4.2 சிதம்பரம் பெரிய கோயிலமைப்பு,

4.3 தேர் வடிவக்கட்டட அமைப்பு (சோழர், பாண்டியர் காலம்)

4.4 பிராமேசுவரம் கோயில்

4.5 பழநிக் கோயில்

4.6 திருவில்லிபுத்தூர்க் கோயில்கள்

4.7 திருவாங்கம் கோயில்

4.8 தொகுப்புரை

5.0 பாட முன்னுரை

5.1 சிறு தெய்வக் கோயில்களின் தோற்றம்

5.2 நாகர் – புற்றுவழிபாட்டுக் கோயில்கள்

5.3 ஐயனார் கோயில்கள்

5.4 பிற சிறு தெய்வக் கோயில்கள்

5.5 பிற வழிபாட்டுக் கோயில்கள்.

5.6 பௌத்தர்கள், சமணர்கள் – கட்டடங்கள்

5.7 இசுலாமியர் கிறித்துவர் வழிபாட்டுத் தலங்கள்

5.8 தொகுப்புரை

6.0 பாட முன்னுரை

6.1 நிலம் தேர்ந்தெடுத்தல்

6.2 ஆலய அமைப்பும் சாத்திர முறையும்

6.3 கோபுரம்.

6.4 ஆலய வடிவம்

6.5 சாளரங்களும் தேவ கோட்டங்களும்,

6.6 கொடிக்கம்பமும் பலி பீடமும்.

6.7 மதில்களும் திருச் சுற்றுகளும்

6.8 ஆலய மண்டபங்கள்

6.9 தூண்கள்

6.10 கருவறையும் விமானமும்

6.11 ஆலயத்தின் பிற அமைப்புகள்

6.12 தொகுப்புரை

 

0 responses to “தமிழக கட்டிடக் கலைகள் pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »