சீவகசிந்தாமணி உரையுடன் முழுவதும் pdf

சீவகசிந்தாமணி

சீவகசிந்தாமணி

            செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்குகின்ற பழைய பெருங் காப்பியங்கள் ஐந்து. அவற்றுள் சீவக சிந்தாமணி ஒன்று. சமண சமயத்தவனான சீவகன் என்னும் அரசனது வர லாற்றை இது விளக்குகின்றது. சொற்சுவை பொருட்சுவை வாய்ந்து கனி சிறந்த இலக்கியமாகப் பண்டுதொட்டே அறி ஞர்களாற் பாராட்டப்பட்டு வருகின்றது. சீவகசிந்தாமணி உரையுடன் முழுவதும் pdf 

பழைய உரை யாசிரியர்களால் யாண்டும் மேற்கோளாக வழங்கப்படும் பெருமை கனிந்தது. இந்நூல் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு கட்குமுன் இயற்றப்பட்டதாயினும், இது முன்னைச் சங்க நூல்களின் தமிழ் நலம் நன்கு வாய்ந்து திகழ்கின்றது. பின்னைக் காப்பிய நூல்கட்கும் பலவகைகளில் இது வழி திறந்து உதவி யிருக்கின்றது.

மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய சிறந்த அற் வுணர்வுகள் பலவும் இதன்கண் நன்கு விளக்கப்பட்டிருக் கின்றன. சமண் சமயக் கொள்கைகளை அறிந்துகொள்ளு தற்கும் இந்நூல் உதவும்.

இதனை இயற்றியருளிய ஆசிரியர், திருத்தக்கதேவர் என்னும் சமண் சமயப் பெரியார். உரையாசிரியர் நச்சி னார்க்கினியர் இதற்கு அரியதோர் உரை எழுதியிருக்கின்றார்.

            இனிக்குந் தீங் காப்பியமான இத்தகைய அரிய நூல் மூவாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களுடையதாயிருக்கின் றது. ஆதலால், நூல் முழுமையும் படித்து நலம் நுகர மலைவுறுவோர்க்கு அதன் கதைத் தொடர்பும் இனிமைகளுங்குறையாத முறையில் ஒரு ‘சுருக்கப் பதிப்பு’ இருப்பின், எல்லாரும் எளிதில் படித்தறிந்துகொள்ள உதவியாயிருக்கும். ஆங்கிலம் முதலிய மொழிகளில் இத்தகைய சுருக்கப் பதிப் புக்கள் பல வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மொழியிலும் அம் முறை பின்பற்றப்படுவதனால் தமிழ் மொழிக் கல்வி பெருகப் பரவுவதற்கும், முழுநூலைக் கற்க ஆர்வமெழுதற் கும் இடமுண்டாகும். இச் சுருக்கப் பதிப்பு, முழு நூலில் ஏறக்குறையக் காற் பங்களவாக வெளிவருகின்றது ; இதனால், அம் முழுநூற் கருத்தை எல்லாரும் இதன்முகமாக எளிதிற் படித்தறிந்து கொள்ளலாம்.

            கதைப் போக்குக் கெடாமல் இனிய செய்யுட்களைத் திரட்டிக் கோத்து, இடையிடையே விடுக்கப்பட்ட பாட்டுக் களின் தொடர்பைச் சுருக்கமாக அங்கங்கும் எளிய உரை நடையில் எழுதிச்சேர்த்து, ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவான உரைக் குறிப்புக்களுங் கொடுத்து விளக்கமான ஓர் ஆராய்ச்சி முன்னுரையோடு இந்நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.

            பாட்டுக்கள் சீர்பிரித்தும் சந்திபிரித்தும் உரிய தலைப்புக்களுடன் அமைக்கப்பட் டிருக்கின்றன. நச்சினார்க் கினியர் உரையோடு வைத்துப் பயில்வதற்கும் இந்நூலும் உரையும் உதவும்.


            இதனை இத்தனை நலம்பெறத் தொகுத்தியற்றியவர், செங் கம் போர்டு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் சங்கநூற் புலவருமான வித்துவான் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள். அவர்கட்குத் தமிழுலகம் பெரிதுங் கட மைப்பட்டிருக்கின்றது : அவர்கட்கு எங்கள் அகமார்ந்த நன்றியைப் புலப்படுத்திக்கொள்கின்றோம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

பொருளடக்கம்

ஆராய்ச்சி முன்னுரை

கடவுள் வாழ்த்து

நாமகள் இலம்பகம்

கோவிந்தையார் இலம்பகம்

காந்தருவதத்தையார் இலம்பகம்

குணமாலையார் இலம்பகம்

பதுமையார் இலம்பகம்

கேமசரியார் இலம்பகம்

கனகமாலையார் இலம்பகம்

விமலையார் இலம்பகம்

சுரமஞ்சரியார் இலம்பகம்

மண்மகள் இலம்பகம்

பூமகள் இலம்பகம்

இலக்கணையார் இலம்பகம்

முத்தி இலம்பகம்

பாட்டு முதற்குறிப் பகராதி

 

சீவகசிந்தாமணி – சுருக்கம்

உரைக் குறிப்புக்களுடன்

செங்கம் போர்டு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியரும்,

ஐங்குறுநூறு உரையாசிரியரும்

ஆகிய வித்துவான்

ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தொகுத்தெழுகியது.

திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
திருநெல்வேலி –  சென்னை.

 

 

0 responses to “சீவகசிந்தாமணி உரையுடன் முழுவதும் pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »