கோயில் பண்பாடு | முனைவர் சிலம்பு நா. செல்வராசு pdf

கோயில் பண்பாடு சிலம்பு ந.செல்வராசு

கோயில் பண்பாடு

            பண்டைய கிரேக்கர்களுடைய சிறப்பான வாழ் விற்குக் காரணமாகக் “கோயில் பண்பாடு” அமைந்ததைப் போலத் தமிழர்களுடைய மேம்பட்ட வாழ்விற்கும் “கோயில் பண்பாடு” பெரிதும் காரணமாக அமைந்துள்ளது. கோயில்கள் தமிழர்களுடைய வாழ்க்கையோடு பல நிலை களிலும் பின்னிப் பிணைந்து நிலைத்தன. எனவேதான் தமிழர்கள், கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கோயிலோடு நீக்கமற நிலைத்து வாழும் முறையைக் கையாண்டனர்.

            தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமாகக் கோயில்கள் அமைந்திருந்தாலும், தஞ்சை மாவட்டத்தில் தான் ஏனைய மாவட்டங்களைவிட அதிக எண்ணிக்கை யிலான கோயில்கள் அமைந்துள்ளன. தஞ்சைத் தரணியி லுள்ள கோயில்கள், கலை வளமும், இலக்கியச் செழுமையும் மிக்கனவாகும். எனவே தமிழர் கோயில் பண்பாட்டைப் புரிந்து கொள்ளத் தஞ்சை மாவட்டக் கோயில்கள் பெரிதும் துணை செய்கின்றன. தஞ்சை மாவட்டத்தில் கோயில்கள் மிகுதியாக உள்ள சீர்காழி வட்டம் இந்த ஆராய்ச்சிக்குக் களமாகக் கொள்ளப் பெற்றுள்ளது.

            தமிழர்கள் கோயில்களோடு கொண்டுள்ள தொடர் பால், சமய வாழ்க்கைப் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றிருந்தது. தமிழர்களின் புராதனக் கலைகளும், இலக்கிய வளங்களும், வழிபாடு போன்ற செயற்பாடுகளும், மக்களின் உயர் மனப்பான்மையையும், பக்தி நெறியையும், சமயப் பண்பாட்டையும் காட்டவல்லனவாகும். இவை அறிவியல் வளர்ச்சியின் புற மாறுதல்களுக்குட்பட்டு, மறைந்தும், அருசியும், மாறியும் வருகின் றன. இவை அழியாமல் பதிவு செய்து பாதுகாப்பதற்கு இவ்வாய்வு வாய்ப்பளிக்கிறது. பண்டைக் காலந்தொட்டுத் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவிப் பரந்து நிலைத்தவை கோயில்களே ஆகும். இக்கோயில்களை ஆராய்வதின் மூலம் தமிழர்களின் சமயப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள இவ்வாய்வு துணை செய்கிறது. தமிழ் இலக்கியங்களில் ஒரு பெரும் பிரிவான பக்தி இலக்கியங்கள் கோயில்களினால் வளர்க்கப் பட்டனவே ஆகும்.

            இவ்வாய்வு. பக்திப் பாடல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், தத்துவப்பாடல்கள் முதலிய இலக்கியங்களின் வளத்தைத் தெரிந்துகொள்ளத் துணை செய்கிறது. மேலும் தஞ்சை மாவட்டத்தில், சைவ வைணவச் சமயங்கள் தழைத்தோங்கி, சமயம் வளர்த்த பெருமையையும் புரிந்து கொள்ள இவ்வாய்வு வாய்ப்பளிக்கிறது.

            இதுகாறும் கோயில்களைப் பற்றி வந்த நூல்களை நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.


கோயில் பற்றிய நூல்கள்/ஆய்வுகள்

1.தலபுராணம், தோத்திரப் பாடல்கள் முதலியன.

2.கோயில்களின், புராண, இலக்கிய, கலை, கல்வெட்டுச் சிறப்புப் பற்றிய தனி நூல்கள்.

3.பத்திரிக்கைகள், இதழ்கள், வழங்கும் திருத்தலப் பெருமை குறித்த கட்டுரைகள் முதலிய பல.

4.ஆய்வேடுகள்

(1) கோயில்களுக்குப் புராணமெருகேற்றி, இறைத் தன்மை மிளிர உலவ விட்ட பெருமை தலபுராணங் களையே சாரும். “காழித்தலபுராணம்”, “புள்ளிருக்கு வேளூர்த் தலபுராணம்”, முதலிய தல புராணங்களை இதற்குச் சான்றுகளாகக் கூற இயலும். இவையல்லாமல், அடியார்கள் கோயிலைப் பற்றி எண்ணிறந்த தனிப்பாடல் களையும், சிற்றிலக்கியங்களையும் அருளிச் செய்துள்ளனர்.  தேவார திருவாசக நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல் களையும், “திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்’, “முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்” – போலும் சிற்றிலக்கியங்களையும் இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.


(2) இரண்டாம் நிலையாக, கோயில்களின் புராணங் கள், இறைவன் கீர்த்தி, கட்டட அமைப்பு, சிற்பங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓவிய நடன நுணுக்கங்கள், கோயிலின் காலம், அமைவிடம், செல்லும் வழி போன்ற பல செய்திகள் அடங்கிய நூல்கள் பல வெளிவந்துள்ளன.

            தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் “வேங்கடம் முதல் குமரி வரை” – என்ற ”பாலாற்றின் மருங்கினிலே”, “பொன்னியின் மடியினிலே”, “காவிரிக் கரையிலே”, பொருநைத் துறையிலே” – என்னும் பகுதிகளாக்கி, தமிழகக் கோயில்களைப் பற்றி ஆராய்த் துள்ளார். நா. சுப்புரெட்டியார் அவர்கள், “மலைநாட்டுத் திருப்பதிகள்” “சோழ நாட்டுத் திருப்பதிகள்’, “தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’, ‘பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்” – என்ற நூல்களில் பல வைணவத் தலங்களை ஆராய்ந்துள்ளார். மேலும், கண்ணப்ப முதலியார் அவர்களின், “தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்’, “பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவத்தலங்கள்” என்னும் நூல்களும், கி. முத்துப்பிள்ளை அவர்களின் ‘சிறப்புமிக்க சிவாலயங்கள்”. “புகழ் மணக்கும் வைணவத் தலங்கள்” என்னும் நூல்களும் மேற்கூறிய செய்திகளில் சிலவும், பலவும் பெற்று அமைந்தனவாகும்.

            கலை, கல்வெட்டு, வரலாறு இவற்றிற்கு முக்கியத் துவம் கொடுத்துச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள், கல்வெட்டுகள் காட்டும் வரலாற்றுச் செய்திகள் முதலிய வற்றின் சிறப்புகள் இந்நூல்களில் அடங்கியுள்ளன. ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்களின், ‘சோழர் கோயிற் பணிகள்”, “தஞ்சைத் திருக்கோயில்கள்”, “தஞ்சை இராசராசேச்சுவரம்”, – முதலிய நூல்களும், குருசாமி தேசிகர் அவர்களின் “தென்னாட்டுத் திருக் கோயில் கல்வெட்டுக்கள்”, இரா. நாகசாமி அவர்களின், “தமிழகக் கோயில் கலைகள்”, இராமசாமி அவர்களின் “தமிழ்நாட்டுச் செப்புத் திருமேனிகள்”, எஸ். ஆர். பால சுப்பிரமணியன் அவர்களின், “சோழர் கலைப்பாணி’, “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்” முதலான பல நூல்களும் மேற்கூறிய செய்திகளை உள்ளடக்கியனவே ஆகும். மேலும் “பழனித் தலவரலாறு”, “ஸ்ரீரங்கநாதர் கோயில் வரலாறு”, “தில்லைச் சிற்றம்பலவன் கோயில்- எனத் தனியொரு கோயில் பற்றிய நூல்களும் வந்துள்ளன.

            (3) மூன்றாவதாக; திருத்தலங்கள் பெருமை குறித்துப் பத்திரிக்கைகள், இதழ்கள் வெளியிடும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். பரணிதரன் (ஆனந்த விகடன்) பொன் பாஸ்கர மார்த்தாண்டன் (இதயம் பேசுகிறது) போன்றோர் இக்கட்டுரைகளை எழுதி உள்ளனர். ”திருக்கோயில்’, “ஞான பூமி”, “ஞானசம்பந்தம்”, தர்மசக்கரம்”, “திருக்கயிலை” – முதலியன சமயந் தொடர்பான இதழ் களாக, சமயக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றன.

            (4) நான்காவதாக; கோயில் பற்றிப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கே. கே. பிள்ளை அவர்கள் “சுசிந்தரம் கோயிலையும்”, சி. கிருட்டினமூர்த்தி அவர்கள் “திருவாரூர் கோயிலையும்”, கே. கோபாலகிருட்டினன் கோயிலையும்”, உமா அவர்கள் “திருக்கழுகுன்றக் மகேசுவரி அவர்கள் “நெல்லையப்பர் கோயிலையும்”, கே. வி. இராமன் அவர்கள் “காஞ்சி காமாட்சியம்மன் கோயிலையும்”, ந. கல்யாணசுந்தரம் அவர்கள் “திருச் செந்தூர் முருகன் கோயிலையும்”, சி. மணி அவர்கள் “கும்பகோணம் சக்கரபாணி கோயிலையும்” -எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். மேலும் கதிர்வேலு அவர்கள் “சேலம் மாவட்டத்துச் சிறு தெய்வங்கள்’’ குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

            இவை வரலாற்றுப் பின்னணி, நில அமைப்பு, கட்டட அமைப்பு, காலம், செயற்பாடு, கலைகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள், சமுதாயத் தொடர்பு போன்ற செய்திகளை மட்டும் உள்ளடக்கியனவாக உள்ளன.

            மேற்குறிப்பிட்ட நூல்களும், கட்டுரைகளும், ஆய்வேடு களும், நாடு தழுவிய நிலையில் உள்ள கோயில்களையோ, அல்லது தனித்த ஒரு கோயிலையோ கொண்டு பொது வான சிறப்புச் செய்திகளையே கூறியுள்ளன.

            மேற்குறிப்பிட்ட நூல்களிலும், கட்டுரைகளிலும், ஆய்வேடுகளிலும் மேற்கொள்ளப்படாத, ஒரு வட்டந் தழுவிய அளவில், சைவ, வைணவ, சிறு தெய்வக் கோயில் வட்டம் களை உள்ளடக்கிக் கோயில் அமைந்திருக்கும் மற்றும் ஊர்கள் பற்றிய செய்திகளும், சமய நிலையும், நேர்த்திக்கடன், நம்பிக்கை, செயற்பாடு, விழா, கூத்துக்கள் பண்பாட்டுக் கொடை முதலியவற்றால் வெளிப்படும் பற்றியும், கோயிலினால் வெளிப்படும்

இலக்கியக் கொடை பற்றியும், சமுகத் தொடர்பு குறித்தும், சமூக இயல் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்வது இதுவே முதல்முறையாகும். இப்பகுப்பு முறையையோ, அணுகு முறையையோ, மேற்குறிப்பிட்ட நூல்கள் முதலியன மேற் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு தமிழர்களின் கோயில்கள் மூலம் வெளிப்படும் பண்பாட்டுக் கொடை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது.

            இவ்வாய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் இயலில் ஆய்வுப் பொருள் அறிமுகம், வரையறை போன்ற செய்திகள் பெறுகின்றன. ஆய்வுப் பின்னணியின் முக்கியத்துவத்தைக் கருதி, இரண்டா இயவில் சீர்காழி வட்டத்தின் பெயர், அமைப்பு, சமயநி பொதுவாக வட்டத்திலுள்ள கோயில்கள் பற்றிய செய்திக ஆராயப்பட்டுள்ளன.

            மூன்றாம் இயலில் கோயில் அமைந்துள்ள ஊர்க்கோயில்களின் அமைப்புகள், தலவிருட்சம், தீர்த்தம், இன உருவம், கீர்த்தி ஆகியன பற்றிய செய்திகள் ஆராய பட்டுள்ளன. நான்காம் இயலில் கோயிலின் செயற்பாடா வழிபாட்டு முறைகள், பாடல்கள், நம்பிக்கைகள், நேர்த்தி கடன்கள், விழாக்கள், விழாக்காலக் கூத்துக்கள் ஆகி செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. ஐந்தாம் இயல் கோயிலி வரலாறு பற்றியமைந்தது. இவ்வியலின் விரிவுக்கு அஞ்சி சீர்காழி சட்டைநாதர் கோயிலின் வரலாறு மட்டு ஆராயப்பட்டுள்ளது. ஆறாவது இயல் கோயில் சமுதாய தோடு கொண்டுள்ள தொடர்பை விளக்குவது. இதில் பூை செய்வோர், பாடகர்கள், பாமர மக்களின் வழிபாடு மரபுகள், கோயிலுக்கும் சமுதாயத்திற்குமுள்ள தொடர் ஆகிய செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. ஏழாவது இய அரிதாகப் பெறப்பட்ட சில வழிபாட்டுச் செய்திகள் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. இவற்றை இந்நூலில் இரண்டாம் பகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.

            இக்கள ஆய்வில் ஆய்வு தொடர்பாகச் செய்திகளை சேகரிப்பதற்குத் தலபுராணங்களும், பக்தி இலக்கியங்களும் கல்வெட்டுக்களும், செவிவழிச் செய்திகளும், சுவடிகளும் அறநிலைத்துறை அறிக்கைகளும், கோயிலோடு தொட புடையவர்கள் தந்த தகவல்களும், சமயத் தொடர்புடை பெரியோர்கள் தந்த செய்திகளும் பெருமளவில் துனை செய்தன. எண்ணற்ற செவிவழிச்செய்திகளையும், நம்பிக்கை கதைகளையும் பலர் எடுத்துரைத்தனர். சுவடிகளில் உள்ள செய்திகள், பழைய கையெழுத்துப் பிரதிகொண்டு சரிபார். கப்பட்டு, அந்த வடிவிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

            தமிழர்களின் கோயில் பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியாக இந்நூல் தோன்றக் கூடும். ஆனால் சைவம், வைணவம், சிறுதெய்வச் சமயம் மூன்றை யும் ஒரு பண்பாடாக அடக்கும் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதை இங்கே அடிக்கோடிட்டுச் சுட்டுதல் வேண்டும். சைவம் வைணவம் ஒருபுறமும் நாட்டுப்புறத் தெய்வச் சமயம் ஒருபுறமும் தனித் தனியேதான் நிற்கின்றன. சைவ வைணவத்தை நாட்டுப்புற மக்கள் தம் அனுபவம் சார்ந்த நிலையில்தான் / தம் வாழ்க்கையோடு தொடர்பு கொண்ட நிலையில்தான் சில இடங்களில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையைத் தவிர ஏனைய இடங்களில் அச்சமயங்கள் தனியேதான் நிற்கின்றன என்பதையும் இங்கே கூறுதல் வேண்டும். என்றாலும் தவிர்க்கமுடியாதபடி வேதாகமங்கள் சார்ந்த சைவ வைணவப் பண்பாடும் தமிழக நாட்டுப்புற மக்களின் உயிர்ப்போடு கூடிய நாட்டுப்புறச் சமயமும் சேர்ந்ததே “தமிழரின் கோயில் பண்பாடு” என்று கூற வேண்டியுள்ளது.

            கோயில் பண்பாடு என்ற பொருண்மை பற்றிய ஒரு முன்மாதிரி அளவீட்டு நூலாக இதனை வாசகர்கள் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்நூல் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்ளும் எம் நிறுவன இயக்குநர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர் களுக்கும் நிறுவனத் தோழர்களுக்கும் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன் சிலம்பு நா. செல்வராசு

பொருளடக்கம்

முன்னுரை

ஆய்வுக்களம் – சமயம் கோயில்கள்

 பெயர்க்காரணம் 23, சீர்காழியின் பிற பெயர் கள் 23, சீர்காழி வட்டத்தின் அமைப்பு 25, புகழ் பெற்ற ஊர்கள் 26, சீர்காழி 26, பூம்புகார் 26, வைத்தீசுவரன் கோயில் 27, திருப்புன்கூர் 27, திருநாங்கூர் 27, திருநகரி 28, திருவெண்காடு 28, திருமுல்லைவாயில் 28, வடரெங்கம் 28, திருமயிலாடி 28, வருசபத்து 29, மாதானம் 29, ஆச்சாள்புரம் 29, தமிழகத் தில் சமயநிலை 30, சீர்காழி வட்டச் நிலை 32, சீர்காழி வட்டத்தில் தோன்றிய அடியார்கள் 32, இன்றைய சமயநிலை 34, ஒன்பது கோள்கள் 37, சைவக் கோயில்கள் 38, வைணவக் கோயில்கள் 40, சிறுதெய்வக் கோயில்கள் 41, குறிப்புகள் 44, இயல் பின்னி ணைப்பு 47, சீர்காழி வட்டக் கோயில்கள் 47, புகழ்பெற்ற சைவக் கோயில்கள் 47, புகழ் பெற்ற வைணவக் கோயில்கள் 48, புகழ்பெற்ற சிறுதெய்வக் கோயில்கள் 49


கோயில் அமைப்பு-விருட்சம்-தீர்த்தம்-உருவம்

கோயில்களும் ஊர்களும் 57, கோயில் கட்டட வளர்ச்சி 60, தமிழகக் கோயில்களின் வகைகள் 60, திருக்கோயில் அமைப்பும் தத்துவமும் 61, முதல் UN 505 62, இரண்டாம் வகை 64, மூன்றாம் வகை 66. நான்காம் வகை 66, தலவிருட்சம் 67, சீர்காழி வட்டத் தலவிருட்சம் 69, தீர்த்தங்கள் 70, சீர்காழி வட்டக் கோயில் களில் இறை உருவங்கள் 73, இலிங்க மூர்த்தம் 74, குரு மூர்த்தம் 74, சங்கம மூர்த்தம் 75, சிறு தெய்வ வடிவங்கள் 75, சீர்காழி வட்டத் தெய்வங்களின் சிறப்புகள் சைவ மூர்த்திகள் 77, வைணவ மூர்த்திகள், நாராயணப்பெருமாள் 80, குடமாடு கூத்தர் 80, பள்ளிகொண்ட பெருமாள் 80, ‘செம்பொன்னரங்கர் 80, அண்ணன் பெருமாள் 80, சிறு தெய்வ மூர்த்தி கள் 81, மாரியம்மன் 81, காளியம்மன் 81, அங்காளம்மன் 82, திரௌபதியம்மன் 82, காமன் 82, உருத்திராபதியார் 83, பண்பாட்டுக் கொடை 83, இலக்கியக் கொடை 85, குறிப்புகள் 86.


கோயிலும் வழிபாடும்

பூசை முறைகள் 92, சீர்காழி வட்டக் கோயில் களின் பூசை முறைகள் கோயில்களில் 93, நைவேத்தியம் 94, சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் 95, வழிபாட்டில் பலி யிடுதல் 97, பலியிடுதலில் சில மரபுகள் 99, வழிபாட்டில் மந்திரம் 100, தோற்றம் 101, சீர்காழி வட்ட வழிபாட்டுப் பாடல்கள் 102, சைவ, வைணவப் பாடல்கள் 102, சிறுதெய்வப் பாடல்கள் 103, விழாக்கால பாடல்கள் 104, உடுக்கைப் பாடல்கள் 105, முதற்பகுதி 106. இரண்டாம் பகுதி 106, மூன்றாம் பகுதி 107, நான்காம் பகுதி 107, இரதியின் ஒப்பாரிப் பாடல்கள் 107, தாலாட்டுப் பாடல்கள் 108, சீர்காழி வட்டத்தில் நம்பிக்கைகள் தெய்வீக மருந்து 110, ஓசை நாயகி 111, தீர்த்தங்களும் நம்பிக்கைகளும் 111, மழை பெய்யும் 111, மக்கட்பேறு 112, குறிகேட்டல் 112, திருநீறு போடுதல் 114, வேப்பிலை அடித்தல் 114, பிரார்த்தனைத் தலங்கள் 116, நேர்த்திக் கடனும் அளிக்கும் முறையும் 116, தொட்டிலும் பாவையும் 117, ஒலியும் ஒளியும் 117, உயிருக்கு உயிர் 118, தீ மிதித்தலும் காவடி எடுத்தலும் 118, சேவல் அளித்தல் 119, விழா 120, விழா-வகைகள் 121, விழாக்களின் நோக்கம் 122, சீர்காழி வட்டத் திருவிழாக் களின் நோக்கங்கள் 123, சிறுதெய்வ விழாக் களின் நோக்கங்கள் 123, காமவிழாவின் நோக்கம் 123, அன்னப்படையல் விழாவின் நோக்கம் 124, தீமிதி விழாவின் நோக்கம் 125, சீர்காழி வட்டத் திருவிழாக்கள் 125, திருமுலைப்பால் உற்சவம் 126, மங்களாசாசன உற்சவமும் கருடசேவையும் 126, வேடுபறி உற்சவம் 127, நந்தனார் உற்சவம் தீமிதித் திருவிழா 128, மாசித் திருவிழா 129, காமன் விழா 129, அன்னப்படையல் விழா 130, மயான சூறை 130, படுகள விழா 131, பாகுபாடு 131, விழாவோடு நேரடித் தொடர் புடையன 133, காமன் விழாவில் 133, படுகள விழாவில் 134, உருத்திராபதியார் விழாவில் 134, கானியாட்டம் 135, விழாவைச் சார்ந்து நிகழ்வன 135, சமயத் தொடர்பானவை 136, கோலாட்டம் 137, சமயத் தொடர்பு இல்லா தன 137, பண்பாட்டுக் கொடையும், இலக்கியக் கொடையும் 138, பண்பாட்டுக் கொடை 138, இலக்கியக் கொடை 141, குறிப்புகள் 141

கோயிலும் வரலாறும்

சட்டைநாதர் கோயில் வரலாறு 150, சட்டை நாதர் கோயில் தோற்றம் பற்றிய செய்திகள் 150, சட்டைநாதர் கோயில் இலக்கியங்கள் தரும் செய்திகள் 151, இறைவன் புகழ் 152, புராணச் செய்திகள் 153, வரலாற்றுச் செய்தி கள் 154, சட்டைநாதர் கோயில் கல்வெட்டுகள் காட்டும் வரலாறு 155, பண்பாட்டுக் கொடை யும் இலக்கியக் கொடையும் 160, பண்பாட்டுக் கொடை 160, இலக்கியக் கொடை குறிப்புகள் 162

கோயிலும் சமுதாயமும்

அ. கோயிலும் பூசை செய்வோரும் சிவாச்சாரியார் பட்டாச்சாரியார் பூசாரிகள் 168, ஆ. கோயிலும் பாடகர்களும் 172, ஓதுவார்களும் தீர்த்தக்காரர்களும் 172, பாடற் பூசாரிகள் 175, நீதிமன்றமும் தண்ட னையும் 183, முறைப்பாடு 184, வற்றைத் தொடங்குதல் 183, கோயில் புகுதல் 186, முதன்மையர் 187, சமயக் குறியீடுகள் 188, கோயிலும் சமுதாய உறவு நிலையும் 188, உறவு நிலையை வெளிப்படுத்தும் சில காரணி கள் 189 மண்டகப்படி 190, இல்லறச் சடங்கு கள் 191, நிலப் பராமரிப்பு 192, பண்பாட்டுக் கொடை 194, பண்பாட்டுக் கொடை 194, குறிப்புகள் 196

சிறுதெய்வ வழிபாடுகள்

சிறுதெய்வ வழிபாடுகள் 199, காமன் விழாவும் பண்பாடும் 201, மூணாங்குழித் திருவிழா 202, பாடல்களும் பண்பாடும் 203, முடிவுரை 204, குறிப்புகள் 205, காமத்தகன விழாவில் இரதி யின் ஒப்பாரிப் பாடல்கள் 206, முகவுரை 206, சமுதாயமும், துன்பியலும் 207, இரதியின் ஒப்பாரிப் பாடலும், சூழலும் 207, பாடல் களின் அமைப்பு 208, பாடல்களில் சமுதாயப் பின்னணி 209, பாடல்களில் மானிட உணர்வு கள் 210,குறிப்புகள் 211, நாட்டுப்புற வழக் காற்றில் சிறுத்தொண்டர் புராணம் 212, முன்னுரை 212, பெரிய புராணமும் பாமர புராணமும் 213, சிறுமையும் பெருமையும் 213, வேறுபாடுகள் 215, பாமரர் பார்வைகளில் வேறுபாடு 217,சுவடிகளில் வனப்பூசை- பதிவும் விளக்கமும் 218, அமைப்பு 218, பேறியான வனுக்கு வனப்புசை பொடும் வேபறமுறை 219, கட்டுரைக்குத் தொடர்பான முதன்மைத் தகவல்கள் 226, சொற்பொருள் விளக்கம் 229, சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள் 232, முன்னுரை 232, பண்டைத் தொடர்பு 233, உருவ அமைப்பு 233, மண் கூம்பு வடிவம் 233, கருவி உருவம் 234, கரக வடிவம் 235, இயற்கைச் செடி கொடிகள். இணைந்த செயற்கை வடிவம் 236, வழிபாட்டில் பலி யிடுதல் 236, சில விதிமுறைகள் 237, வழி பாட்டில் இசைப் பாடல்கள் 238, விழாக் காலப் பாடல்கள் 238, உடுக்கைப் பாடல்கள் 239, தாலாட்டுப் பாடல்கள் 239, ஒப்பாரிப் பாடல்கள் 239, நம்பிக்கைத் தொடர்பு 239, கடவுளை அழைத்தலும் குறிகேட்டலும் 240, வழிபாட்டில் அருஞ்செயல்கள் 241, வழி பாட்டில் நேர்த்திக் கடன்கள் 242, சில முடிவு கள் 243,குறிப்புகள் 246 துணை நூல்கள் தகவலாளர் பற்றிய குறிப்புகள்


கோயில் பண்பாடு

சிலம்பு நா. செல்வராசு

உரிமை: பாக்கியவதி செல்வராசு

வெளியீடு: அனிச்சம் இலக்கிய வட்டம்

உரிமையாளர்: பாக்கியவதி செல்வராசு 11, இரண்டாம் தெரு,

                               மோகன் நகர் புதுச்சேரி-605 005

பதிப்பு : முதற்பதிப்பு: 1999 சூலை 11

                  திருவள்ளுவர் ஆண்டு 2030 ஆனித்திங்கள்

விலை: ரூபாய் அறுபது (ரூ.60/-)

அச்சகம்: சபாநாயகம் அச்சகம்

                   கீழைத்தேர்வீதி, சிதம்பரம் – 608 001.

 

கோயில் பண்பாடு

முனைவர் சிலம்பு நா. செல்வராசு

விரிவுரைஞர் இலக்கியப்புலம்

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

அனிச்சம் இலக்கிய வட்டம்

புதுச்சேரி – 605005

மேலும் பார்க்க,

தமிழ்க் கோயில்கள் தமிழர்ப் பண்பாடு

0 responses to “கோயில் பண்பாடு | முனைவர் சிலம்பு நா. செல்வராசு pdf”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »