என் சரித்திரம்
தமிழ்த் தலைமுறையின் பெருமைமிகு அடையாளம்!
‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா. காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. இழந்தவை போனாலும், எஞ்சிய செல்வங்களைக் காப்பாற்றி இன்றைய தமிழ்த் தலைமுறையின் பார்வைக்கு எடுத்து வந்தவர் நம் தமிழ்த் தாத்தா அவர்களே! என் சரித்திரம் | டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
கல்தோன்றும் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழ் மொழி, இன்றைக்கும் இளமை குன்றாமல் இருப்பதற்கு தமிழ் அறிஞர்களின் தமிழ் மொழி மீதான அர்ப்பணிப்புதான் முக்கியக் காரணம். தமிழுக்காகவே தன்னை வார்த்துக் கொண்ட அறிஞர் பெருமக்களில் தனித்து நிற்பவர் உவே.சா. தமிழின் தொன்மைக்கும் உண்மைக்கும் உ.வே.சா. அவர்களின் தீவிரமான தேடுதலில் விளைந்த படைப்புகளே ஆதாரங்கள்.
இன்றைய தமிழ்த் தலைமுறைப் பிள்ளைகளுக்கான பெரும் சொத்துக்களைத் தேடித்தந்த உவே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் இந்த நூலில் விளக்கி இருக்கிறார். பதிப்பிக்கப்பட்ட பேரறிவுப் புத்தகங்களை வாசிக்கும் நாம், அவை எப்படி எல்லாம் தமிழ்த் தாத்தாவால் மறு சீரமைக்கப்பட்டன என்பதை அறிய வேண்டியது வரலாற்றுக் கடமை. இதனை அணிந்துரை வடிவில் செவ்வனே வலியுறுத்தி இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. ‘கொள்ளக் குறையாதசரித்திரமாக’ இதனைச் சுட்டிக்காட்டிச் சிலிர்க்கிறார் ஔவை நடராசன்.
ஓலைச்சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களை அச்சு வடிவில் மீட்டுக் கொடுத்த தமிழ்த் தாத்தாவின் சுய சரித்திரம் இது. தமிழ்த் தலைமுறையினர் தங்களின் பெருமைமிகு அடையாளமாக பேரறிவுப்
புதையலாக தூய பரிசாக – தொன்மைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டிய இந்த அரிய நூலை, தொன்மை குன்றாத சிறப்போடு வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது.
– ஆசிரியர்
கொள்ளக் குறையாத சரித்திரம்!
நமக்கு வாய்த்த நூற்பரப்பின் தன் வரலாற்று நூல்களில் தனித்து விளங்குவது உ.வே.சா. ஐயர் அவர்களின் ‘என் சரித்திரம்’. இந்த நூல் எழுதப் பெறுவதற்கு முன்பே பாரதியார் தன் சுயசரிதையைக் கவிதையாக எழுதினார். அதுவும் முற்றுப்பெறாது முடிந்த இலக்கியம்.
ஐயரவர்கள் வரைந்த `தன் வரலாறு, தம் ஆசிரியர்பிரான் பிள்ளையவர்களின் வரலாற்றோடு ஒரு வகையில் சிலம்பு, மேகலைபோல் பின்னிப்பிணைந்த ஒன்று. பிள்ளையவர்களிடம் தாம் கல்வி பயில வந்த வரலாறு தொடங்கி, தமிழோடு தாம் கொண்ட உறவை விழுமிய உரைநடையால் காப்பியமாக்கிய மாபெரும் இலக்கியமே, ஐயர் அவர்களின் ‘என் சரித்திரம்’.
கோடிக் கோடித் தனிமனிதர்களின் `தன் வரலாறுகள்’ இணைந்ததே ஒரு நாட்டின் வரலாறு. மாறாக, தனியொரு மன்னனின் வரலாற்றை மட்டும் விரித்துரைத்து நாட்டின் வரலாறாக மயங்கி ஒரு மயக்க உணர்வில் நாம் போக்கிய நெடுங்காலம் இருந்தது. மக்கள் வரலாறு ஒன்றே, ‘வரலாறு’ என்னும் நல்லுணர்வு இப்போது தலைப் பட்டுள்ளது.
பொதுவாக 19-ம் நூற்றாண்டில், ‘தன் வரலாறுகள்’ ஒருசில தோன்றின. டாக்டர் ஐயர் அவர்கள், 1940-ல் தொடங்கித் தம் இறுதிக் காலமான 1942 வரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதாவது, தமது 85-ம் வயது தொடங்கி 87-ம் வயது வரை சரித்திரம் திகழ்கிறது. இந்த அரிய கலைக்கருவூலம், தமிழகத்தின் 20-ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு. தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்க்கை அமைவுகளின் படப்பிடிப்பும் இதில் உண்டு. இதனை ஆராய்வோர், அன்றைய மக்களின் பொருளாதார நிலை, பண்பு நலன்கள், குணங்குறைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், சமயநிலை, இலக்கிய வளர்ச்சி முதலிய எண்ணற்ற செய்திகளைக் கொள்ளக்
அள்ளிக்கொள்ளலாம்.
குறையாத நிலையில் நவில்தொறும் நூல்நயம் பயில்தொறும் பயக்கும் ஒப்பற்ற `இந்தத் தமிழ்த் தன் வரலாற்றுத் தலைமை நூலை ஐயர் அவர்களை எழுதத் தூண்டி, ஆனந்த விகடனில் சென்ற நாற்பதுகளின் தொடக்கத்தில் வெளிவரச் செய்த அற்றை நாள் ஆசிரியர், தலைவர், விகடன் அதிபர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள், தமிழ் பேசும் மக்களின் நன்றிக்கு நாளும் போற்றிப் பரவுவதற்கு உரியவர்.
விகடனின் இலக்கியப் பதிப்புச் சிறப்புக்கும், வனப்போடு பொலிவுற வெளியிடும் தகைமைக்கும் எடுத்துக்காட்டாக இந்த நூல் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்ச் செல்வத்தை நாட்டுக்கு மீட்டுத் தந்த முதுபெரும் புலமை வேந்தராகத் திகழ்ந்த டாக்டர் உவே.சா. அவர்களைப் போற்றும்,
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே!
என்ற நம் தேசியகவி பாரதியாரின் பாராட்டு வரிகளுக்கு ஈடில்லை.
ஒளவை நடராசன்
(தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர்)
பொருளடக்கம்
1.எங்கள் ஊர்
2.என் முன்னோர்கள்
3. என் பாட்டனார்
4.சில பெரியோர்கள்
5. கனம் கிருஷ்ணையர்
6. என் தந்தையார் குருகுல வாசம்
7. கிருஷ்ண சாஸ்திரிகள்
8. எனது பிறப்பு
9.குழந்தைப் பருவம்
10. இளமைக் கல்வி
11. விளையாட்டும் வித்தையும்
12. அரியிலூர் ஞாபகங்கள்
13. தமிழும் சங்கீதமும்
14. சடகோபையங்காரிடம் கற்றது
15. வண்டி நகர்ந்தது’
16. கண்ணன் காட்சியின் பலன்
17. தருமம் வளர்த்த குன்னம்
18. குன்னத்தில் அடைந்த தமிழ்க் கேள்வி
19. தருமவானும் லோபியும்
20. விவாக முயற்சி
21. சிதம்பர உடையார்
22.என் கல்யாணம்
23. ஏக்கமும் நம்பிக்கையும்
24. காரிகைப் பாடம்
25. செங்கணத்தில் வாசம்
26. மாயூரம் சேர்ந்தது
27. முதல் நாள்
28. பாடம் கேட்கத் தொடங்கியது
29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
30. தளிரால் கிடைத்த தயை
31 என்ன புண்ணியம் செய்தேனோ!
32. தமிழே துணை
33. அன்பு மயம்
34. புலமையும் வறுமையும்
35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்
36. எல்லாம் புதுமை
37. எனக்குக் கிடைத்த பரிசு
38. நான் கொடுத்த வரம்
39. யான் பெற்ற நல்லுரை
40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்
41. ஆறுமுக பூபாலர்
42. சிலேடையும் யமகமும்
43.ஸரஸ்வதி பூஜையும் தீபாவளியும்
44. திருவாவடுதுறைக் காட்சிகள்
45. புலமையும் அன்பும்
46. இரட்டிப்பு லாபம்
47. அன்பு மூர்த்திகள் மூவர்
48. சில சங்கடங்கள்
49, கலைமகள் திருக்கோயில்
50. மகா வைத்தியநாதையர்
51. சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
52. திருப்பெருந்துறைப் புராணம்
53. அம்மை வடு
54. எழுத்தாணிப் பாட்டு
55. சிறு பிரயாணங்கள்
56. நான் இயற்றிய பாடல்கள்
57. திருப்பெருந்துறை
58. எனக்கு வந்த ஜ்வரம்
59. திருவிளையாடற் பிரசங்கம்
60.. அம்பரில் தீர்ந்த பதி
61. பிரசங்க ஸம்மானம்
62. இரட்டைத் தீபாவளி
63. `சிவலோகம் திறந்தது
64. அபய வார்த்தை
65. தேசிகர் சொன்ன பாடங்கள்
66. மடத்திற்கு வருவோர்
67. சந்திரசேகர கவிராஜ பண்டிதர்
68.. திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை
69. ராவ் பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை
70. புது வீடு
71. சிறப்புப் பாடல்கள்
72. நான் பெற்ற சம்மானங்கள்
73. நானே உதாரணம்’
74. நான் பதிப்பித்த முதல் புஸ்தகம்
75. இரண்டு புலவர்கள்
76. ஸ்தல தரிசனம்..
77. சமயோசிதப் பாடல்கள்
78. குறை நிவர்த்தி
79. பாடும் பணி
80. புதிய வாழ்வு
81. பிரியா விடை
82. சோதனையில் வெற்றி
83.. காலேஜில் முதல் நாள் அநுபவம்
84. எனக்கு உண்டான ஊக்கம்
85. கோபால் ராவின் கருணை
86.. விடுமுறை நிகழ்ச்சிகள்
87. கவலையற்ற வாழ்க்கை
88. “என்ன பிரயோசனம்?”
89. ஜைன நண்பர்கள்
90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்
91. எனது இரண்டாவது வெளியீடு 92. சிந்தாமணி ஆராய்ச்சி
93.. மூன்று லாபங்கள்
94.இடையே வந்த கலக்கம்
95. சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்
96. சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்
97. பலவகைக் கவலைகள்
98.. புதிய ஊக்கம்
99. மகிழ்ச்சியும் வருத்தமும்
100.சிந்தாமணி வெளியானது
101.அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி
102.அடுத்த நூல்
103.சுப்பிரமணிய தேசிகர் வியோகம்
104.திருநெல்வேலிப் பிரயாணம்
105.பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்
106.நல்ல சகுனம்
107.கண்டனப் புயல்
108.பத்துப் பாட்டுப் பதிப்பு
109.சிலப்பதிகார ஆராய்ச்சி
110.பயனற்ற பிரயாணம்
111.பல ஊர்ப் பிரயாணங்கள்
112.தமிழ்க் கோயில்
113.ஹிருதயாலய மருதப்பத் தேவர்
114.சிலப்பதிகாரப் பதிப்பு
115.சிலப்பதிகார வெளியீடு.
116.கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்
117.புறநானூற்று ஆராய்ச்சி
118.மூன்று துக்கச் செய்திகள்
119.புறநானூற்றுப் பதிப்பு
120.மணிமேகலை ஆராய்ச்சி
121.மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்
122. நான் பெற்ற பட்டம்
மகாமகோபாத்யாய
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
விகடன் பிரசுரம்
Leave a Reply