ஆதித்த கரிகாலன் வரலாற்றுக் கதை

ஆதித்த-கரிகாலன்

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

            பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு வணக்கம். அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனைப் படித்து, அந்தக் கதாப்பாத்திரங்களோடு வாழ்ந்து வரும் பல்லாயிரம் ரசிகர்களில் நானும் ஒருவன். ஆதித்த கரிகாலன் வரலாற்றுக் கதை

            ஒரு கதை படித்து முடித்த பிறகு அதன் தாக்கம் ஒருவர் மீது ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் என்ற வார்த்தையைக் கேட்கும் பொழுதே என் கண்முன்னே அந்தக் கதை படமாக ஓடத் தொடங்கும். எப்பொழுது பார்த்தாலும் என் நண்பர்களோடு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் படியுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருப்பேன்.

            ஒரு முறை இந்தக் கதைக்கும் முன்னால் என்ன நடந்திருக்கும் என்று என் நண்பனோடு விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது நான் கூறிய கருத்துக்கள் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டன. இதை ஏன் நீ எழுதக்கூடாது என்று அவன் கேட்க, செல்வனின் ரசிகர்களை ஒரு பொன்னியின் கதை கூறி சமாதானப்படுத்துவது என்பது முடியாத ஒன்று. பலபேர் இதற்காக முயற்சித்து அந்த முயற்சியில் தோற்றுத்தான் போனார்கள் என்று நான் கூற, முதலில் முயற்சி செய் என்று பதிலுக்கு அவன் கூறினான்.

            ஒருமனதாக எனது படவரி (இன்ஸ்டாகிராம்) பக்கத்தில் இந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு பிரதிலிபியிலும் எழுதினேன்.

            கதை நன்றாக இருக்கிறது என்று அனைவரும் கூறினர். சரி ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று இந்தக் கதையை முழுவீச்சாக ஒரு சிறிய புத்தகமாக எழுதியுள்ளேன்.

            இந்தக் கதை முற்றிலுமாக பொன்னியின் செல்வன் நாவல் நடப்பதற்கு முன்பாக என்ன நடந்திருக்கும் என்பதைச் சில உண்மைகளுடன் எனது கற்பனையையும் வரலாற்று சேர்த்து எழுதியுள்ளேன்.

ஆதித்த கரிகாலன் - பாகம் 2

            பொன்னியின் செல்வன் கதை படிக்கும் பொழுது ஆதித்த கரிகாலரின் கதாப்பாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது, நண்பர்களோடு விவாதிக்கும் பொழுது இவரின் பெயரைக் கேட்கும்போது எனக்கு மெய்சிலிர்க்கும்! அதனால் என் கதை இவர் வழியாக பொன்னியின் செல்வனை அடைவதாக இருக்கப்போகிறது.

            பொன்னியின் செல்வனில் வரும் எந்த ஒரு கதை திருப்பத்தையும் நான் என் கதையில் உடைக்கவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் கல்கி எழுதியுள்ள சில காட்சிகளைக் கதையின் சுவாரசியத்திற்காகப்
பயன்படுத்திக்கொண்டேன்.

            சில கற்பனை கதாப்பாத்திரங்களையும் நான் இந்தக் கதையில் சேர்த்துள்ளேன். முக்கியமாக கல்கி எழுதாமல் விட்ட உத்தமசீலி எனும் மறக்கப்பட்ட சோழ இளவரசனை எனது கதையின் முக்கிய கதாப்பாத்திரமாகச் சேர்த்துள்ளேன்.

இந்தக் கதை பொன்னியின் செல்வன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என்று கேட்டால் இதற்குப் பதில் புத்தகத்தைப் படித்துவிட்டு நீங்கள் தான் கூற வேண்டும்.


அன்புடன்,
இன்ப பிரபஞ்சன், ஜெ

வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்

இன்ப பிரபஞ்சன்.ஜெ

ஏலே பதிப்பகம்

எழுத்தாளர்: இன்ப பிரபஞ்சன்.ஜெ
முதல் பதிப்பு: செப்டம்பர் 2021
வெளியீடு:
ஏலே பதிப்பகம்

5/175, பாத்திமா நகர்,

கூத்தென்குழி,

திருநெல்வேலி – 627104

தொடர்புக்கு: 9944992571

 

ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன்

            “ஆதித்த கரிகாலன்” அப்படின்னு சொன்னாலே வரலாற்று நாவல் படிக்கக்கூடிய அனைவருக்கும் ரொம்ப குதூகலம் ஆயிடும். சில பேருக்கு அந்த பெயரை கேட்டால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். ஏன்னா ஆதித்த கரிகாலன் அப்படிங்கற அந்த மாபெரும் மனிதரை பொன்னியின் செல்வன் நாவலின் மூலமாகதான் நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கும். அந்த நாவல் ஏறக்குறைய மூன்று தலைமுறையை தாண்டி நின்னு, இன்னும் பல புத்தக வாசிப்பாளர்களையும் பல சரித்திர நாவல் ஆசிரியர்களையும் உருவாக்கிட்டு இருக்கு.
            இந்த ஆதித்த கரிகாலன் சிறுவயதிலேயே இறந்துட்டார் என்கிற விஷயம் தான் எல்லாருக்கும் வருத்தமாக இருக்கும். ஏன்னா பொன்னியின் செல்வன் என்கின்ற மிக பிரம்மாண்டமான நாவல்ல நம்ம ஆசிரியர் கல்கி அப்படியே குறிப்பிட்டிருந்தார். ஆனா பிற்காலத்தில் கிடைத்த வரலாற்றுத் தரவுகள் வைத்து பார்க்கும் போது நம்ம ஆதித்ய கரிகாலன் இளம் வயதில் இறக்கவில்லை, நிறைய ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. அப்படி அவர் வாழ்ந்த காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்ம பொன்னியின் செல்வனில் மட்டுமில்லாமல் வேற ஒரு வழியாகவும் பார்க்க முடியும். இதை பற்றி நம்ப நூலாசிரியர் டாக்டர் திரு இன்ப பிரபஞ்சன் அவர்கள் அழகாக முதல் பாகத்தில் சொல்லி இருப்பார்.

            முதல் பாகத்தில் சேவூர் போர் எப்படி நடந்திருக்கும் என்கிற விஷயத்தை ரொம்ப அழகா, நேர்த்தியாக கண்ணெதிரில் கொண்டுவந்து காட்டி இருப்பாரு நம்ப இன்ப பிரபஞ்சன்,

            அதான் முதல் பக்கத்திலேயே வீரபாண்டியன் தலையை கொய்தாச்சு, ஆதித்த கரிகாலனுக்கும் “வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி” என்கின்ற பட்டம் கிடைச்சிருச்சு. அப்போ அடுத்த பாகம் என்ன எழுதுவார் என்று நானும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன்! அந்த ஆவலை அவர் முழுக்க முழுக்க இந்தப் புத்தகத்தில் பூர்த்தி செய்துவிட்டார். இந்த புத்தகத்தை படிக்கும்போது எனக்கு ஆதித்த கரிகாலன் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதை யோசிக்க வைத்தது.

            முதல் பாகத்தில் உத்தமசீலியுடைய வாளில் இருந்து ஆரம்பித்த கதை, மீண்டும் உத்தமசீலியின் வாளில் முடியும். இந்த பாகத்திலும் அதே மாதிரி ஒரு பயங்கரமான காரணி இருக்குமோ என்ற எண்ணத்துடன் படித்தேன்!

            ஆனால் அவர் எனக்கு கொடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம்!. அதை நீங்களும் படித்து உணரும்போது அந்த ஆச்சரியம் என்னவென்று உங்களுக்கும் தெரியும். ஆதித்த கரிகாலனுடன் நம்ப இன்ப பிரபஞ்சன் மட்டும் சேர்ந்து பயணிக்கவில்லை, அவருடைய எழுத்து மூலமாக நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம். பொன்னியின் செல்வனை வைத்து மட்டும் நம்ப இன்ப பிரபஞ்சன் கதை எழுதாமல், இன்னும் நிறைய கதைகள் எழுதி நம்ப எல்லாரையும் மகிழ்விக்கனும்.

இப்படிக்கு
சிரா

ராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன்

இன்ப பிரபஞ்சன்.ஜெ

ஏலே பதிப்பகம்

எழுத்தாளர்: இன்ப பிரபஞ்சன்.ஜெ
வெளியீடு:
ஏலே பதிப்பகம்

5/175, பாத்திமா நகர்,

கூத்தென்குழி,

திருநெல்வேலி – 627104

தொடர்புக்கு: 9944992571

 

ஆதீத்த கரிகாலன் கொலை


            பல ஆண்டு காலமாக தமது அறிவார்ந்த எழுத்துத் திறமையினால் தமிழ் எழுத்துலகில் தமக்கென ஒரு தனியிடத் தினைப் பெற்றவர் டாக்டர். கோவி. மணிசேகரன் அவர்கள்.


            அவருடைய சரித்திர நாவலான ஆகித்த கரிகாலன் கொலை’ என்ற நூலை எங்கள் அபிரா மி பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிட்டிருக்கிறோம். சரித்திரப் பின்னணியில் கற்பனை கலந்த சம்பவங்களை உருவாக்கி, தமது அழகுதமிழ் நடையால் நாவல் முழுவதையும் சுவைபட எழுதியுள்ளார். இதனை வெளியிட இசைவு தந்த திரு. கோவி. மணிசேகரன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்து, வாசகப் பெரு மக்களுக்கு மகிழ்ச்சியுடன் இந்நூலைப் படைக்கின்றோம்.


சென்னை-1 21-2-83

கே. பனையப்பன்

உரிமையாளர் : அபிராமி பப்ளிகேஷன்ஸ்

 

ஆதீத்த கரிகாலன் கொலை

டாக்டர் கோவி. மணிசேகரன்

அபிராமி பப்ளிகேஷன்ஸ் 307, லிங்கிசெட்டி தெரு, சென்னை-1

முதற்பதிப்பு: பிப்ரவரி 1983

உரிமை- ஆசிரியர்க்கு

விலை.ரூ.12

அச்சிட்டோர் : ஸ்ரீ தேவி காமாட்சி பிரிண்டர்ஸ், சென்னை-11,

 

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் பாகம் – 2

            “எழுத்து வசப்பட்டுவிட்டது. முழுமையாக ஓர் புதினம் எழுதவேணும்.” என இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஐயன் பாலகுமாரனால் தூண்டி வைக்கப்பட்ட ஒரு சிறு பொறிதான் ஆதித்த கரிகாலன் பற்றிய இந்த புதினம்.

            சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகிப் போனவன் ஆதித்த கரிகாலன்.’ இவனின் தம்பிதான் அருண்மொழி என்னும் இராஜராஜன் என்பது அருண்மொழிக்குப் பெருமை. ஐந்தே ஆட்சியாண்டுகள்தான் கிடைக்கின்றன கல்வெட்டுகள் மூலம், என்றாலும், அதற்குள்ளாகவே எவருமே தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றதே இவனுடைய சிறப்பு. ‘சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்’ என்னும் பெரும் களங்கத்தினை, தம் வீரத்தால், மதயானைகள் கூட்டத்தில் சிங்கம் நுழைந்தது போல் களம்கண்டு, வேட்டையாடி, வீழ்த்தி, “வீரபாண்டியன் தலைகொண்ட’ கோப்பரகேசரியாக உருவெடுத்தவன், பராந்தகர் கைவிட்ட பாண்டியரின் மணிமுடியும், இந்திர ஆரமும், இன்னும் சிறிது காலம் இவன் உயிரோடு இருந்திருந்தால்.. அப்போதே சோழத்தின் காலடியில் கிடத்தப்பட்டிருக்கும் என்பதும் மறுக்கவே முடியாத உண்மை.

            அவனது காலத்தில், அவனுக்கு நிகரான வீரனே கிடையாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அத்தகைய மாவீரனான ஆதித்த கரிகாலன், துரோகிகளால் கொல்லப்பட்ட தகவல் மட்டுமே தருகிறது உடையார்குடி கல்வெட்டு,  சோழர் கால செப்பேடோ, ‘விண்ணுலகைக் காணும் ஆசையில், மண்ணுலகைவிட்டு நீங்கினான் ஆதித்தன்’ என்கிறது. ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளின் அடிப்படையில் எழுந்ததுவே இப்புதினம்.

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்


            இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என எனக்குள் உணர்ந்ததனை மட்டுமே இங்கு முடிவாகத் தந்திருக்கிறேன். ஒருவேளை, நாளை இதுவே உண்மையாக நடந்தது என்பதற்கான ஆதாரம் கிட்டினால், இறையருள் அதிக தரவுகள் இல்லாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் மிகப்பெரிய நிகழ்வினை, வரலாற்று மாற்றத்தை, தன்னிகரில்லாத ஓர் மாவீரனின் வாழ்வியலை, கற்பனையோடுதான் சில இடங்களில் பயணிக்க வேண்டியும் இருந்தது. என்றாலும், சிறப்பான வகையில் முடித்திருக்கிறேன் என்ற நிறைவும் கூடவே உண்டு என்னுள். ‘சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்’ முதல் பாகத்தின் மூலம், என்னையும் வரலாற்று எழுத்துலகில் அறிமுகம் செய்து, இப்போது, இந்த இரண்டாவது பாகத்தினையும் பதிப்பித்து, என்னை நன்றிக்கடனாளி ஆக்கிய முனைவர். திரு. இராமநாதன் அவர்களுக்கும், அவரது வானதி பதிப்பக ஊழியர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.

            ஒரு புத்தகம் பதிப்பிப்பதற்கு என்னென்ன உதவிகள், எந்தெந்த வகையில் செய்ய வேண்டுமோ.. அத்தனையையும் நாம் கேட்கும் முன்பே செய்து முடித்துவிட்டு, அடுத்து என்ன என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் ஓர் நபர்.. பல்கலை வித்தகர்.. வரலாற்று உலகில் பல எழுத்தாளர்களை முன்கொணர்ந்தவர் என அத்தனை பெருமைக்கும் உரிய, திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
சென்னையில் வசிக்கும் ஒரே காரணத்தால், எனது அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு, கேட்டவற்றை வாங்கியனுப்பி, இப்புதினம் எழுதத் துணையாக நின்று. ‘ஐயா.. வேறெதாவது வேண்டுமா..?’ என உரிமையோடு கேட்டு நிற்கும், அன்புத் தம்பி. திரு. விஜய் பட் அவர்களை நினைத்தேயாகவேண்டி உள்ளது இத்தருணத்தில்,  மதிப்பிற்குரிய மூத்த நண்பர்கள், திரு. சென்னை இராமநாதன் அவர்களும், ஐதராபாத் மணிகண்டன் அவர்களும், எனக்களித்த தூண்டுதலுக்கும், உற்சாகத்திற்கும் நன்றி கூற வார்த்தைகள் இல்லை. எப்போதும் போல் என் எழுத்தின் வழியே எனை நேசிக்கும் எனது இனிய வாசக நண்பர்களுக்கு, வணக்கங்கள் பலப்பல.


உணர்வோடு உங்கள், உளிமகிழ் ராஜ்கமல்,

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் பாகம் – 2

உளிமகிழ் ராஜ்கமல்

வானதி பதிப்பகம் 23,

தீனதயாளு தெரு. தி.நகர், சென்னை-17.

0 responses to “ஆதித்த கரிகாலன் வரலாற்றுக் கதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »